Minapa sunnundalu: ஆந்திரா உளுந்து லட்டு சாப்பிட்டு இருக்கீங்களா! செம டேஸ்ட்...

மினப சுன்னுண்டலு - பெயரே வித்தியாசமாக இருக்கிறது என நினைக்க வேண்டாம். இது உளுந்தம் பருப்பை கொண்டு செய்யப்படும் ஆரோக்கியமான லட்டு ஆகும்.

bellam minapa sunnundalu

திருப்பதி லட்டு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பாரம்பரிய ஆந்திரா சமையலில் பல விதமான லட்டுகள் உள்ளன. நாம் ரவா லட்டு, ராகி லட்டு, பூந்தி லட்டு, தேங்காய் லட்டு சாப்பிட்டு இருப்போம். இவை அனைத்தின் ருசியை முறியடிக்கும் விதமாக ஆந்திராவில் மினப சுன்னுண்டலு எனும் ஒரு லட்டு உள்ளது. இது உளுந்து பருப்பு மற்றும் கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படும் லட்டு ஆகும். என்னது உளுந்து பருப்பை வைத்து லட்டு செய்ய முடியுமா என நீங்கள் சந்தேகிக்கலாம். மகர சங்கராந்தி, தீபாவளி பண்டிகைகளின் போது ஆந்திர மக்களின் ஸ்பெஷல் ஸ்வீட் இந்த மினப சுன்னுண்டலு. சுவாமிக்கு படையலிடவும் இந்த லட்டு செய்வார்கள். வாருங்கள் ருசி பார்க்கலாம்.

black gram laddu

மினப சுன்னுண்டலு / உளுந்து லட்டு செய்யத் தேவையானவை

  • உளுந்து பருப்பு
  • கருப்பு உளுந்து பருப்பு
  • நெய்
  • ஏலக்காய்
  • அரிசி
  • நாட்டு வெல்லம்
மேலும் படிங்க

மினப சுன்னுண்டலு / உளுந்து லட்டு செய்முறை

  • கடாயில் எண்ணெய் ஏதும் ஊற்றாமல் ஒன்னே முக்கால் கப் உளுந்து பருப்பு போட்டு வறுக்கத் தொடங்கவும்
  • அடுத்ததாக இதனுடன் கால் கப் கருப்பு உளுந்து பருப்பு சேருங்கள்
  • நாம் சுமார் 15 நிமிடங்களுக்கு பருப்பை வறுக்க வேண்டி இருக்கும். எனவே குறைந்த தீயில் அடுப்பை வைத்து வறுக்கவும்
  • உளுந்தம் பருப்பின் பச்சை வாடை போன பிறகும் சிறிது நேரத்திற்கு வறுக்கவும்
  • இப்போது மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி வறுக்கவும். இறுதியாக ஐந்து ஸ்பூன் சாப்பாட்டு அரிசி சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுங்கள்.
  • உளுந்தம் பருப்பை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். அதே கடாயில் வைத்திருந்தால் பருப்பு கருகக் கூடும்.
  • அரைமணி நேரம் கழித்து இதனை மிக்ஸியில் போட்டு பவுடர் போல அரைக்கவும்
  • அரைத்த பிறகு அதில் பாதியை எடுத்துவிட்டு ஒன்றை கப் வெல்லம், நான்கு ஏலக்காய் சேர்த்து மீண்டும் அரைக்கவும். ஏலக்காய் லட்டுவிற்கு நல்ல சுவையை தரும்.
  • அடுத்ததாக ஒரு கப் நெய்யை அடுப்பில் சூடுபடுத்தி அதை அரைத்து வைத்திருக்கும் உளுந்து - வெல்லம் பவுடரின் மீது ஊற்றுங்கள்
  • நன்றாக மிக்ஸ் செய்து உங்களுக்கு பிடித்தமான சைஸில் உருண்டை பிடிக்கவும்.
  • இதை நீங்கள் ஒரு மாத காலத்திற்கு கூட வைத்து சாப்பிடலாம் கெட்டுப் போகாது.
  • இந்த செய்முறையைப் பின்பற்றி நீங்கள் வீட்டில் தயாரிக்கும் உளுந்து லட்டு ஆந்திரா கடைகளில் கிடைக்கும் லட்டுவின் சுவையை விட அற்புதமாக இருக்கும்.

இன்னும் ஸ்பெஷலான ரெசிபிகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP