herzindagi
image

பிரமாதமான ஆந்திரா சிக்கன் புலாவ் செய்முறை; மீண்டும் மீண்டும் ருசிக்க தோணும்

ஆந்திராவில் பிரபலமான ராஜு காரி கோடி புலாவ் என்பது அசைவ உணவுகளின் அரசன் சிக்கன் புலாவ் என்றழைக்கப்படுகிறது. பிரியாணி சாப்பிட்டு சலித்திருந்தால் சிக்கன் புலாவ் செய்து ருசி பார்க்கவும். 
Editorial
Updated:- 2024-11-06, 19:15 IST

ராஜு காரி சிக்கன் புலாவ் என்பது ஆந்திராவின் பிரபலமான ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட உணவாகும். நம்மிடம் சிக்கன் இருந்தால் பிரியாணி அல்லது வறுவல் செய்ய தோன்றும். ராஜு என்றால் அரசன், அசைவ உணவுகளின் அரசன் என அர்த்தம். புதிய ரெசிப்பிகளை ருசிக்க விரும்புவோர் ராஜு காரி சிக்கன் புலாவ் செய்து பார்க்கலாம். பிரியாணியும் இதன் செய்முறையும் வித்தியாசமானது. காரசாரமான உணவுகளை விரும்பும் நபராக இருந்தால் கட்டாயமாக சிக்கன் புலாவ் ருசி பார்க்கவும். வார விடுமுறையில் பிரியாணி, அசைவ உணவுகளை சாப்பிட்டு பழகி இருந்தால் புதிய முயற்சியாக சிக்கன் புலாவ் சமைத்து குடும்பத்தினரை அசத்தவும்.

chicken pulao

ராஜு காரி சிக்கன் புலாவ் செய்ய தேவையானவை

  • சிக்கன்
  • பெரிய வெங்காயம்
  • முந்திரி
  • பூண்டு
  • இஞ்சி
  • சாப்பாட்டு அரிசி
  • நல்லெண்ணெய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • கரம் மசாலா
  • வர மிளகாய்
  • பச்சை மிளகாய்
  • ஏலக்காய்
  • இலவங்கபட்டை
  • கறிவேப்பிலை
  • சீரகம்

மேலும் படிங்க ரசித்து ருசிக்க சூப்பரான மட்டன் கோலா உருண்டை ரெசிபி!

ராஜு காரி சிக்கன் புலாவ் செய்முறை

  • சிக்கன் புலாவ் செய்வதற்கு முதலில் பேஸ்ட் தயாரித்துவிடலாம். ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், தலா பத்து முந்திரி மற்றும் பல் பூண்டு, 50 கிராம் இஞ்சி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் தயாரிக்கவும்.
  • இதையடுத்து ஒரு கிலோ சிக்கனை தண்ணீரில் கழுவி வைத்து கொள்ளவும்.
  • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிக்கனை வறுத்தெடுக்கவும். இப்போது மிக்ஸியில் அரைத்த பேஸ்ட் சேர்த்து கலந்து விடுங்கள்.
  • அடுத்ததாக தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா போட்டு கலந்து விட்டு இரண்டு - மூன்று நிமிடங்களில் மசாலா சிக்கனில் இறங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடுங்கள்.
  • மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு சிக்கன் வேகட்டும். வெந்த பிறகு சிக்கனை தனியாக வைக்கவும்.
  • அதே கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வதக்கவும்.
  • வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் பத்து வர மிளகாய், 4 பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம், 4 கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு இலவங்கபட்டை போட்டு வதக்கவும்.
  • வதங்கிய பிறகு 4 டம்ளர் சாப்பாட்டு அரிசியை போட்டு மிக்ஸ் செய்யவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து சிக்கன் போடவும்.
  • ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி கடாயை மூடிவிடுங்கள்.
  • மிதமான தீயில் 15 நிமிடங்களில் பிரமாதமான ராஜு காரி சிக்கன் புலாவ் தயாராகிவிடும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]