வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை போல இந்தியா முழுக்க உள்ள மாணவர்களை அடையாளப்படுத்த அபார் ஐடி கார்டு வழங்கும் திட்டத்தை தேசிய கல்விக்கொள்கையில் மத்திய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதற்கு தானியக்க நிரந்தர கல்விக்கணக்கு என அர்த்தம். அபார் ஐடி கார்ட்டை ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி எனக் கூறுகின்றனர். மாணவர்களின் தகவல் அனைத்தும் அபார் எண் வழியாக சேகரிக்கப்படும். ஆரம்ப பள்ளியில் தொடங்கி மேற்படிப்பு, கல்லூரி படிப்பு வரை பெறும் மதிப்பெண், பட்டம், விருதுகள், சான்றிதழ்கள், உதவிக்தொகை உள்ளிட்ட அனைத்து விவரமும் சேகரிக்கப்படும். 12 டிஜிட்டல் எண்களில் உங்களுடைய மொத்த கல்வி விவரங்களை அடக்கி விடலாம்.
அபார் ஐடி கார்டு பதியும் முறை
அபார் ஐடி பெறுவதற்கு முதலில் பெற்றோரின் ஒப்புதல் தேவை. பெற்றோரின் விருப்பம் இன்றி மாணவரின் எந்த விவரமும் இணையத்தில் பதிவேற்றப்படாது. பயிலும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அபார் ஐடி பெற முடியும்.
- அகாடமி பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் என்னுடைய கணக்கு கிளிக் செய்து மாணவன் தேர்ந்தெடுக்கவும்.
- டிஜி லாக்கருக்குள் நுழைய செல்போன் எண், முகவரி, ஆதார் எண் விவரங்களை பதிவிடவும்.
- டிஜி லாக்கருக்குள் நுழையுங்கள்.
- இதில் நீங்கள் அளித்த ஆதார் எண் தகவல் சரி பார்க்கப்படும்.
- பயிலும் கல்வி நிறுவனத்தின் விவரத்தை பதிவிடவும்.
- படிவத்தை பூர்த்தி செய்தால் அபார் ஐடி கார்டு பெறுவதற்கு அபார் எண் உருவாக்கப்படும்.
அபார் ஐடி கார்டு பதிவிறக்கம்
- அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் தளத்திற்குள் நுழையவும்
- ஓரத்தில் அபார் கார்டு பதிவிறக்கம் கிளிக் செய்யவும்
- உங்களுடைய அபார் கார்டு டிஜிட்டல் வடிவில் தெரியும்
- இதை பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்
குறிப்பு : ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும் அகாடமிக் பேங்க் ஆஃப்
கிரெடிட்ஸில் கொடுக்கும் பெயரும் ஒன்றாக இருப்பது அவசியம். பள்ளியிலும்,
கல்லூரியிலும் உங்களுடைய கல்வி விவரங்களை ஆசிரியர்கள் அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள்.
மேலும் படிங்கடிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்வு முடிவுகள் விவரம்
அபார் ஐடி கார்டு பயன்கள்
- எதிர்காலத்தில் தேசிய அளலிவான நுழைவுத் தேர்வுகளை முறையாக நடத்திட அபார் ஐடி கார்டு உதவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க அபார் எண் கொடுத்தால் போதுமானது. அதுவே உங்களுடைய அனைத்து விவரங்களையும் எடுத்துக் கொள்ளும்.
- தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், உடல்நல தகவல், இதர துறைகளில் சாதனை உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்.
- நீங்கள் 60 வயதில் இரண்டாவது பட்டப்படிப்பு படித்தாலும் கூட அபார் எண் பயன்படுத்தி விவரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு கல்வி நிறுவனத்திற்கு மாறும் போது அபார் எண் கொடுத்தால் போதும்.
- இதில் மாணவரின் தகவல் அப்டேட் செய்யப்படவில்லை எனில் இடைநிற்றலை கண்டுபிடித்து அந்த மாணவர் கல்வி பயில அரசு உதவும்.
- இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் அபார் ஐடி கார்டு ஏற்கப்படும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation