தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகளை டிசம்பர் 12ஆம் தேதி வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரப்பூர்வ தளமான tnpsc.gov.in-ல் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ-ல் சுமார் 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு சுமார் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ-ல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 20ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஜூலை 20ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. மொத்தமுள்ள 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பத்தனர்.
செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதல் நிலைத் தேர்வானது 2 ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பித்திருந்த 7,93,996 பேரில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் தேர்வை எழுதியிருந்தனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுத வரவில்லை. பல மையங்களில் தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை
இந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் நிலை தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. இதனிடையே கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இந்த படிகளை பின்பற்றவும்.
1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
2. இதில் குரூப் 2 முடிவுகள் 2024 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்
3. உங்களுடைய விவரங்களை பதிவு செய்யுங்கள்
4. இப்போது தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5. பி.டி.எப் வடிவில் தேர்வு முடிவுகள் உள்ளன. இதில் உங்களுடைய பதிவு எண் இருந்தால் நீங்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதியானவர்.
குரூப் 2, 2ஏ தேர்வு முழு அட்டவணை | தேதி |
குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு (தமிழ்) | 2 பிப்ரவரி 2025 |
குரூப் 2ஏ, இரண்டாம் தாள் | 8 பிப்ரவரி 2025 |
குரூப் 2, இரண்டாம் தாள் | 23 பிப்ரவரி 2025 |
முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு அடுத்த வாரத்திற்குள் 150 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]