காதலர் வாரத்தின் இரண்டாம் நாளான ப்ரோபோஸ் டே அன்று உங்கள் அன்புக்குரியவரிடம் எப்படி ப்ரோபோஸ் செய்யலாம் என குழப்பத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் அதற்கான சில வழிகளை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
2024 காதலர் தினம் ஏறக்குறைய வந்துவிட்டது. காற்றில் அபரிமிதமான காதல் பரவி இருக்கிறது. காதலர் வாரத்தில் வரும் முக்கியமான நாட்களில் பிரபோஸ் டே-வும் ஒன்றாகும். உங்கள் வாழ்க்கையில் அந்த சிறப்பு வாய்ந்த நபரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் சில தனித்துவமான தந்திரங்களைப் பயன்படுத்தி ப்ரோபோஸ் டே அன்று அவர்களை ப்ரோபோஸ் செய்யுங்கள்
முதல் சந்திப்பை மீண்டும் உருவாக்கவும்
ப்ரோபோஸ் டே அன்று நீங்களும் இருவரும் முதல் முறையாக எங்கு சந்தித்தீர்களோ அதை நினைவில் கொண்டு ரீ- கிரியேட் செய்யுங்கள். இதை தேஜாவு என சொல்லலாம். அந்த இடத்திற்கு அவர்களை வரவழைத்து அல்லது அழைத்துச் சென்று இங்கே தான் முதலில் சந்தித்தோம் உனக்கு ஞாபகம் வருகிறதா என கேட்டு பாருங்கள். அவர்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றால் நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். மேலும் முதல் சந்திப்பின் போது எந்த உடையை அணிந்து இருந்தீர்களோ அதே உடையை அணிந்து செல்லவும்.
பயணம்
நீங்கள் காதலிக்கும் நபருக்கு த்ரில்லிர் படங்கள் பிடிக்கும் என்றால் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அல்லது சுவாரஸ்யம் நிறைந்த மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இப்படி நீங்கள் இருவரும் தனியாகப் பயணிக்கும் போது உங்கள் மீதான அன்பும், நம்பிக்கையும் அவர்களுக்கு அதிகரிக்கும். குறிப்பாக சூரிய உதயம் அல்லது சூரியன் அஸ்தமனத்தை எளிதில் பார்க்ககூடிய இடத்திற்கு செல்லுங்கள். சரியான நேரத்தைக் கணித்துவிட்டு அவர்கள் இயற்கையை ரசித்தவுடன் முன்னே சென்று கைகளைப் பிடித்து ப்ரோபோஸ் செய்யுங்கள்
மேலும் படிங்ககாதலியிடம் எப்படி ப்ரோபோஸ் பண்ணலாம்?
உங்கள் ப்ரோபோஸலில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க விரும்பினால் அவர்களுக்குத் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாத அளவிற்கு சிறப்பான சம்பவத்தை செய்யுங்கள். அவர்கள் திகைத்துப் போய் என்ன செய்வது என யோசிக்கும் இடைவெளியில் ப்ரோபோஸ் செய்துவிட்டு, கொஞ்ச நேரத்திற்கு முன்பாக நடந்தது அனைத்துமே Prank என சொல்லி சமாளித்துவிடுங்கள். இதை சொன்ன பிறகு அவர்கள் உங்களைப் புன்னகையுடன் அடிக்க வந்தால் காதலுக்கு ஓகே என அர்த்தம்.
அழகான கவிதை
உங்கள் காதலியின் மனதில் இடம்பிடிப்பதற்கான எளிய வழி கவிதை எழுதுவது. அவர்கள் அழகை வர்ணித்து கவிதை எழுதாமல் அவர்களுக்கு எது பிடிக்குமோ அதைத் தெரிந்து கொண்டு ஒரு கவிதை எழுதுங்கள். அவர்களின் எந்தச் செயல் உங்களைக் கவர்ந்தது என்றும் அவர்கள் விரும்பியதை அடைய நீங்கள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்றும் கவிதையில் உணர்த்தி ப்ரோபோஸ் செய்யுங்கள்.
மேலும் படிங்ககாதலிக்கு சிவப்பு ரோஜா கொடுப்பதன் ரகசியம்!
ஸ்கிராப் புக்
ஸ்கிராப் புக் தயாரிப்பதன் மூலம் எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரலாம். அவர்களுடன் நட்பாக பழக தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தேதியுடன் குறிப்பிட்டு ஸ்கிராப் புக் தயாரியுங்கள். இதை அவர்களிடம் காண்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்று புரிய வைப்பதற்கான அழகான வாய்ப்பாகும்.
உங்கள் காதல் உறவிடம் ப்ரோபோஸ் செய்ய இந்தத் தனித்துவமான மற்றும் அழகான வழிகளை முயற்சிக்கவும். இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் மேலும் அறிய ஹெர் ஜிந்தகியுடன் உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation