மாதம் ரூ 20 ஆயிரம் சம்பாதிக்க பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி அளிக்கும் அரசு

தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டவுள்ளது. இதில் 45 நாட்கள் பயிற்சி காலத்தை நிறைவு செய்தால் அரசே மாதம் 20 ஆயிரம் வருமானம் பெறக் கூடிய வேலையை வாங்கித் தரும்.
image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன் பெறும் வகையில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 45 நாள் பயிற்சியை நிறைவு செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். பெண்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சிக்கு தகுதி, விண்ணப்ப விவரம், பயிற்சி காலம் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

tahdco fashion design course

அழகுக்கலை பயிற்சிக்கான தகுதிகள்

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்.
  • 8 முதல் 12ஆம் வகுப்பு படித்த நபராக இருக்க வேண்டும்
  • வயது : 18 முதல் 35
  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பது அவசியம்

அழகுக்கலை பயிற்சி

  • இதன் பயிற்சி காலம் மொத்தம் 45 நாட்கள் ஆகும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தங்கும் வசதி, உணவு உட்பட செலவினங்களை தாட்கோ ஏற்கும்.
  • சென்னையில் தங்கி படிக்கும் வசதியும் உண்டு.
  • இப்பயிற்சியினை முழுமையாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
  • இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப கால
  • மாத சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பெற முடியும்.

அழகுக்கலை பயிற்சிக்கான விண்ணப்பம்

இந்த குறுகிய கால பயிற்சியை பெற்றிட tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு எம்பி குறைவான புகைப்படத்தை இணைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர் எஸ்சி, எஸ்டி அல்லது எஸ்சிஏ என்பதை குறிப்பிட வேண்டும். அடுத்த இடத்தில் சாதியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு கீழ் கல்வி தகுதி மற்றும் அதன் விவரத்தை குறிப்பிடுங்கள். தொடர்ந்து பெயர், தந்தையின் பெயர், தந்தையின் தொழில், தாய், தாயின் தொழில், பிறந்த தேதி, பாலினம், முகவரி, சாதி சான்றிதழ் எண், ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடுங்கள். இதையடுத்து சாதி சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றுங்கள். அனைத்து விவரங்களை பதிவு செய்த பிறகு ஒரு முறை சரிபார்க்கவும். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விரைவில் பயிற்சிக்கு அளிக்கப்படுவீர்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP