குடும்பம் மற்றும் பணியில் சிறப்பாக பயணிப்பதற்கான சிம்பிள் டிப்ஸ்!

வாரம் அல்லது மாதத்தில் ஒரு முறையாவது உங்களுக்காகவோ? அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ? எந்தவிதமான கவனச்சிதறல்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.

maintain work balance for women

பணிக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்களின் மன வேதனையையும் வார்த்தைகளால் கூற முடியாது. காலையில் எழுந்து விட்டு வேலைகளை முடித்து விட்டு சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்குச் செல்லும் பெண்கள் ஒவ்வொருவரும் பல இன்னல்களை அனுபவித்துத் தான் வருகிறார்கள். அதிலும் குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்லும் பெண்களாக இருந்தால் அலுவலகத்தில் பணியாற்றினாலும் நினைப்பு முழுவதும் வீட்டில் தான் இருக்கும். இந்த சூழலில் வேலை மற்றும் வாழ்க்கையில் சமநிலையை எவ்வாறு அடைவது என்பதை நீங்க்ள் தெரிந்துக் கொள்ள நினைத்தால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே..

guide to work

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான டிப்ஸ்கள்:

நேர மேலாண்மை:

அலுவலகத்தில் பணியாற்றினாலும், வீட்டில் இருந்து பணியாற்றினாலும் நேர மேலாண்மை முக்கியமான விஷயம். எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்ய வேண்டும்? குடும்பத்தை எப்படி கவனிக்க வேண்டும்? என்பது குறித்த நேர மேலாண்மையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உரிய நேரத்தில் அதற்குரிய வேலைகளை நீங்கள் செய்யும் போது, உங்களது இலக்கை அடைய முடியும்.

அட்டவணையைப் பின்பற்றுதல்:

உங்களது பணியைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்து ஒரு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய நடவடிக்கை உங்களது பணியை எவ்வித இடையூறு இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக செய்ய வேண்டும்.

கவனச்சிதறல்களைத் தவிர்த்தல்:

உங்களது பணியையும், குடும்பத்தையும் சரியாக கவனிக்க வேண்டும் என்றால், கவனச்சிதறல்களை முதலில் தவிர்க்கவும். குறிப்பாக நீங்கள் ஒதுக்கிய நேரத்தில் அதற்கான பணிகளைச் செய்வதற்கு தடையாக இருப்பதற்கு சோசியல் மீடியாக்கள் தான் தடையாக இருக்கும். எனவே மொபைல் போன்களைப் பயன்படுத்துவது பணியைத் திசைதிருப்பும் என்பதால் இதைத்தவிர்ப்பது நல்லது. அலுவலக ரீதியான தகவல்கள் வந்தால் மட்டும் மொபைல் போன்களை எடுப்பது நல்லது. இவ்வாறு செய்யும் போது சீக்கிரம் உங்களது பணியை முடித்து விட்டு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது நல்லது.

எல்லைகளை உருவாக்குதல்:

வேலை மற்றும் வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வேலையில் ஈடுபட வேண்டாம் என்று நீங்கள் தேர்வு செய்யவும். வேலை செய்யும் போது உங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று உங்கள் குடும்பத்தினரிடமும் அன்புக்குரியவர்களிடமும் கேட்பதன் மூலம் பணிகளைத் திறம் பட முடிக்க முடியும்.

achieving work

மேலும் படிக்க:வாழ்நாள் முழுவதும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

இதோடு வாரம் அல்லது மாதத்தில் ஒரு முறையாவது உங்களுக்காகவோ? அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ? எந்தவிதமான கவனச்சிதறல்களும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். இது போன்ற பல விஷயங்கள் பணி மற்றும் குடும்பத்தில் எவ்வித இடையூறுகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பயணிக்க உதவியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP