படிப்பு என்பது எல்லோருக்கும் சுவாரஸ்யமாக அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு அது புத்தகத்துடன் போர் புரிவது போன்றே உள்ளது. பிள்ளைகள் புத்தகத்தை திறப்பார்கள். ஆனால், படிக்க மாட்டார்கள். அப்படியே உட்கார்ந்து இருப்பார்கள். இதற்கு காரணம் புரிதலின்மை தான். சில பிள்ளைகளுக்கோ, புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வந்துவிடும். ஒரு சில பிள்ளைகள் எந்நேரமும் கையில் புத்தக்கதுடன் இருப்பார்கள். ஆனால், மதிப்பெண் மிக மோசமாக எடுப்பார்கள். இதற்கு காரணம், எப்படி படிக்க வேண்டும் என்ற அணுகுமுறையை அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் போவதாலே ஆகும்.
பொதுவாக, பிள்ளைகளை படிக்க வைப்பதென்பது எளிதான காரியமே. இதற்கு பலவித அணுகுமுறையை நாம் முயன்று பார்க்கலாம். இது போன்ற டிப்ஸ்களை நாம் முயற்சி செய்து பார்க்கும்போது, பிள்ளைகளின் கவனிக்கும் திறன் பலமடங்கு பெருகும். பிள்ளைகள் புரிந்து படிப்பதால், குறைவான நேரத்தில், அதிகமாக படிக்கும் திறனையும் பெறுகிறார்கள். அதோடு, வெகுநாட்களுக்கு அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவும் கூடும்.
வகுப்பறையில் நிறைய பிள்ளைகள் இருப்பர். ஆனால், கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரே. எனினும், பிள்ளைகளின் மதிப்பெண் மாறுபட்டே இருக்கும். இதற்கு காரணம், படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தும் அணுகுமுறைகள் என்பது மாற்றமடைவது தான். அதனால், இன்று பிள்ளைகளை படிக்க வைக்க சில எளிய அணுகுமுறைகளை நாம் அறிந்து பயன் பெறலாம்.
சத்தான உணவை மெல்லுதல்
பிள்ளைகள் படிக்கும்போது சுவையான உணவை அவர்களின் கண்களுக்கு காட்டாதீர்கள். அப்படி செய்தால், அவர்களின் கவனிக்கும் திறன் படிப்பதில் இல்லாமல் போகும். அதற்கு பதிலாக, சத்தான பருப்பு வகைகளை நாம் அவர்களிடம் கொஞ்சமாக கொடுக்கலாம். அவற்றை மெல்லுவது கவனக்குறைவை தடுக்கும். பெரும்பாலும், அவர்கள் கடினமான தலைப்புகளை படிக்கும்போது இவ்வாறு செய்யலாம்.
குறிப்பை எழுதி படிக்க வைத்தல்
இன்று நம்முடைய பிள்ளைகளுக்கு எழுதும் பழக்கம் குறைந்துக்கொண்டே போகிறது. காரணம், ஆன்லைன் வகுப்புகளும் தான். பிள்ளைகளுக்கு ஹேண்ட் ரைட்டிங் என்ற நோட்டை பரிந்துரைப்பதையே பல பள்ளிகள் விட்டுவிட்டன. இதனால், பேனா, பென்சில் பிடித்து எழுதுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் ஆய்வு முடிவுகள் கூறுவது என்னவென்றால், எழுதுவது பிள்ளைகளின் நினைவாற்றலை மேம்படுத்துமாம். குறிப்பாக மொபைல், லேப்டாப் போன்றவற்றில் படிப்பதை காட்டிலும் இது நற்பலனை தருகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது. அதனால், நம்முடைய பிள்ளைகள் எதையாவது புதிதாய் கற்றுக்கொள்ளும்போது, அவற்றை எழுதி பார்த்து சொல்ல பழக்கம் செய்வது நல்லது.
படிப்பதற்கான செயலிகளை பயன்படுத்துதல்
இதுவும் நம்முடைய பிள்ளைகளின் படிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. இன்றைய நாளில், பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப படிக்கும் செயலிகள் பல வந்துள்ளன. இந்த செயலிகள் ஒரு தலைப்பை குறித்த புரிதலை பல மடங்கு எளிதாக்குகின்றன. இது போன்ற செயலிகளால், நம் பிள்ளைகள் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், இது போன்ற செயலிகள், பாடங்களை செய்முறை விளக்கமாக அளிப்பதன் மூலம் பிள்ளைகளுக்கு எளிதில் புரியவைக்கிறது.
இடம் மாற்றி அமர வைத்தல்
இது ஒரு சாதாரண விஷயம் தான். எனினும், நல்ல பலனை அளிக்கும். சில பிள்ளைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால் நாளடைவில் அலுப்படைகின்றனர். இதனால் படிப்பது சலித்து போக, எளிமையான பாடம் கூட அவர்களுக்கு கடினமாக தெரியக்கூடும். மேலும், இது அவர்களின் மனநிலையையும் பாதிக்கிறது. அதனால், இடம் மாற்றி அமர வைத்து அவர்களை நாம் படிக்க வைக்கலாம்.
ரோல் பிளே விளையாட்டை செய்தல்
இது பெரும்பாலும், இளம் பிள்ளைகளுக்கு உதவும். உங்கள் பிள்ளைகள் ஒரு பாடத்தை படிப்பார்கள். ஆனால், விரைவில் மறந்துவிடுவார்கள். இந்த மாதிரியான சூழலில், நாம் அவர்களுக்கு அந்த தலைப்பு குறித்து நடித்து காட்டலாம். இவ்வாறு நடித்து காட்டி விளக்குவதால், உங்களுடைய பிள்ளைகள் எளிதில் புரிந்துக்கொள்வர். இவ்வாறு செய்வதனால் அவர்களுக்கு மறக்கவே மறக்காது.
பிள்ளைகளை படிக்க வைப்பதற்கான சில எளிய அணுகுமுறைகளை நாம் இந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யவும், ஷேர் செய்யவும், கமெண்ட் செய்யவும். மேலும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: shutterstock, freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation