தமிழகத்தில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாட்டம் 4 நாட்களுக்கு களைக்கட்டும். தமிழர் கலாச்சாரத்தில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகவும் பார்க்கப்படுகிறது. இந்த இனிய நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி சூரிய பகவானுக்கு பொங்கல் படைப்பார்கள். வெளியூர்களில் வேலை செய்பவர்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வார்கள். அவர்களை வரவேற்க குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
அதே போல் சில சமயங்களில் ”எங்கள் ஊர் பொங்கலை பார்க்க வாருங்கள்” என நண்பர்களையும் அழைத்து வருவார்கள். இப்படி பல மகிழ்ச்சியான தருணங்கள் பொங்கல் திருநாளில் அரங்கேறும். வழக்கமாக பண்டிகை நாட்களுக்காக வீட்டில் பெயிண்ட் அடிப்பது, சுத்தம் செய்வது, வீட்டை அழகுப்படுத்துவது ஆகியவை பொதுவாக இருக்கும் பழக்கம். ஆனால் இந்த பொங்கலுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக வீட்டை அலங்கரிப்பது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பூக்கோலம்
வாசலில் கோலமாவில் கோலம் போடுவது தான் வழக்கம். அதற்கு பதில் வாசலை இன்னும் அழகாக காட்ட பூக்கோலம், கலர் கோலம் ஆகியவற்றை போடலாம். பொங்கலை கொண்டாடும் விதமாக பொங்கல் கோலங்களை போட்டு அதை அழகுப்படுத்தலாம். ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டலாம். இதனால் வாசல் மட்டுமில்லை நீங்கள் வசிக்கும் தெருவே அழகாக தெரியும்.
மா இலைகளை தொங்க விடுவது
வீட்டை அழகாக அலங்கரிப்பதற்கான எளிமையான வழி, மா இலை தோரணங்களை கட்டுவது. இதனால் நேரமும் மிச்சம், செலவும் குறைவு, வீடும் அழகாக காட்சியளிக்கும். வாசற்படி, பூஜை அறை, ஹாலில் மா இலை, தோரணங்களை கட்டி வீட்டை அலங்கரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:வீட்டு தரைகள் அழுக்காக அசிங்கமாக உள்ளதா?
வால் ஸ்டிக்கர் அலங்காரம்
விதவிதமான அழகான டிசைன்களில் ஏகப்பட்ட வால் ஸ்டிக்கர்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து சுவர்களில் ஒட்டி வீட்டை அழகாக காட்டலாம். காலியாக இருக்கும் சுவர்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
வண்ண விளக்குகள்
வாசல், வீட்டின் முன் பகுதி, கதவு, ஹால் போன்ற பகுதிகளில் அழகான வண்ண விளக்குகளை தொங்க விடலாம். இதனால் மொத்த வீடும் அழகாக தெரியும் . பொங்க பண்டிகையை நீங்கள் வரவேற்க தயாராகி விட்டீர்கள் என்பது அக்கம் பக்கத்தினருக்கும் தெரிய வரும். வண்ண விளக்குகள் ஒருவிதமான பாசிட்டிவான உணர்வை தரும்.
இந்த பதிவும் உதவலாம்:இப்படி செய்து பாருங்களேன்! உங்கள் வீட்டு கிட்சன் எப்போதுமே சுத்தமாக இருக்கும்!
எனவே, இந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்களும் இந்த பொங்கல் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்கரியுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation