கிட்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள என்ன வழிகள்: ஒவ்வொரு பெண்ணும், அவள் வீட்டு சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவே ஆசைப்படுவாள். ஆனால், எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்ள நினைத்தாலும், சமைக்கும்போது அழுக்காகிவிடுகிறது. இதனால், நம் வீட்டு கிட்சனில் மோசமான வாடை வருகிறது. வாடை அதிகம் வரும்போது கரப்பான் பூச்சிகள் கிட்சனை ஆக்கிரமிக்கின்றன.
பொதுவாக, கிட்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேறு சில விஷயங்களையும் நீங்கள் செய்ய வேண்டும். நாம் வேண்டாம் என நினைக்கும் விஷயங்கள் கூட நம் வீட்டு கிட்சனை மோசமாக மாற்றிவிடும். அவை என்னவென்பதை இந்த பதிவில் படித்தறிந்து பயன் பெறலாம் வாருங்கள்.
நீங்கள் கிட்சனில் சமைக்கும்போது சில விஷயங்கள் சிதறுவதை கவனித்தும் அலட்சியமாக இருப்பீர்கள். இதனை அப்போதே சுத்தம் செய்து விடுவது நல்லது. எனவே தான், துடைக்கும் உபகரணங்களை உங்களுடனே வைத்துக்கொள்வது நல்லது. அந்த இடத்தில் துடைக்கும் பொருட்கள் இல்லாவிட்டால், தாமதமாக சுத்தம் செய்துக்கொள்ளலாம் என்ற மனநிலை வந்துவிடும். இது உங்களுடைய ஒட்டுமொத்த கிட்சனையும் மோசமாக மாற்றிவிடும். எப்போதும் ஈரமான இடத்தை துடைப்பதற்கு, காய்ந்த இடத்தை துடைப்பதற்கு என இரண்டு துணிகளை வைத்துக்கொள்வது நல்லது. இதனால் நம் வீட்டு கிட்சன் எப்போதுமே அழகாக காட்சியளிக்கும்.
நாம் சமையல் செய்யும்போது பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உரித்துவிட்டு தோலை அப்படியே போட்டுவிடுவோம். இவை சீக்கிரமே அழுகிவிடும். இதனை தவிர்ப்பதற்கு எப்போதுமே ஒரு சிறிய குப்பை தொட்டியை உங்கள் வீட்டு கிட்சனில் வைத்துக்கொள்ளவும். எப்போது காய்கறிகளை நறுக்கினாலும், தாமதிக்காமல் உடனடியாக தோலை அந்த குப்பை தொட்டியில் போட்டுவிடவும். எனினும், ஈரமாக உள்ள குப்பைகளை நம்மால் குப்பை தொட்டியில் போட முடிவதில்லை. இல்லையேல், குப்பை தொட்டியிலும் சேர்ந்து வாடை அடிக்க ஆரம்பித்துவிடும். இது ஒட்டுமொத்த கிட்சனையும் பாழாக்கிவிடும்
ரவை, மஞ்சள், உளுந்து போன்ற பொருட்கள் பாக்கெட்டுகளில் வருகின்றன. பாக்கெட்டுகளை பிரித்துவிட்டு அப்படியே வைத்துவிடுவோம். இவற்றை ரப்பர் பேண்டு போட்டு சுற்றி வைப்பது நல்லது. இதனால் மசாலா தூள் போன்றவை கீழே விழுந்து கிட்சனை மோசம் செய்யாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
நீங்கள் கிட்சனில் சமைக்கும்போது அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அதன்பிறகு, கைகளை உலர்ந்த டவல் கொண்டு துடைக்க மறந்துவிடாதீர்கள். இல்லையேல், நீங்கள் கை வைக்கும் இடம் எல்லாம் ஈரமாக தொடங்கிவிடும். அதனால், காய்ந்த டவலையும், ஈரமான டவலையும் தனித்தனியாக கிட்சனில் வைப்பது நல்லது. இதனால் உங்கள் கைகளோடு சேர்த்து கிட்சனும் சுத்தமாக எப்போதும் இருக்கும்.
இவற்றை செய்து வாருங்கள். நிச்சயம், உங்கள் வீட்டு கிட்சன் எப்போதும் சுத்தமாக இருக்கும். மேலும் இது போன்ற கிட்சன் டிப்ஸ் உங்களுக்கு வேண்டுமெனில், அதனை கமெண்டில் தெரியப்படுத்தவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik, shutterstock
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]