வீட்டு தரைகள் அழுக்காக அசிங்கமாக உள்ளதா? இந்த டிப்ஸை முயன்று பாருங்களேன், நிச்சயம் பளபளக்கும்!!!

இந்த பதிவினை படிப்பதன் மூலமாக உங்கள் வீட்டு தரையில் உள்ள அழுக்கை எளிதில் அகற்றி பளபளக்க செய்யலாம்.

mosaic clean big

இப்போதெல்லாம் வீட்டிற்கு விதவிதமான டைல்ஸ்களை வாங்கவே நாம் ஆசைப்படுகிறோம். சிலர் சிம்பிளான டைல்ஸை அவர்களுடைய வீட்டுக்காக தேர்வு செய்கின்றனர். சிலர் டிசைன் போட்ட டைல்ஸ்களை தேர்வு செய்கின்றனர். சிலர் அவர்கள் வீட்டு பாத்ரூம், பால்கனி போன்றவற்றுக்கு மொசைக் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், மொசைக் தரைகளை சுத்தம் செய்வது எளிதான காரியமல்ல. இந்த தரைகளில் விதவிதமான கற்கள் பயன்படுத்துவதால், தரைகள் கரடுமுரடாக இருக்கும்.

இந்த பதிவில், மொசைக் தரைகளை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து நாம் பார்க்கவிருக்கிறோம்.

இதனை முதலில் செய்யலாமே

mosaic clean

மொசைக் தரைகளும் சுத்தம் செய்ய எளிதானவை தான். ஆனால், சுத்தம் செய்வதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக, மொசைக் தரைகளை சுத்தம் செய்வதற்கு முன்னால், தரையில் ஒன்று முதல் இரண்டு வாளி தண்ணீரை ஊற்றி கொஞ்ச நேரம் விட்டுவிடவும். இதனால் அழுக்கானது திரண்டு வரும். சிறிது நேரம் கழித்து, தரையில் இருந்து தண்ணீரை அகற்றவும்.

பேக்கிங் சோடா

mosaic clean

ஆம், பேக்கிங் சோடாவை நாம் பல முறை, பல விஷயங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுத்துகிறோம். ஆனால், பேக்கிங் சோடா கொண்டு மொசைக் தரைகளை சுத்தம் செய்ய, ஒரு சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

  • முதலில், 1 முதல் 2 லிட்டர் தண்ணீரை சுடவைக்கவும்
  • இப்போது 2 முதல் 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்துக்கொள்ளவும்
  • அதன்பிறகு, தரையில் இந்த கலவையை ஊற்றி, 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்
  • 10 நிமிடங்கள் கழித்து, சுத்தமான பிரஷை கொண்டு தேய்த்து எடுக்கவும்
  • இதனால் மொசைக் தரைகள் சுத்தமாக இருக்கும்

ஹைட்ரஜன் பெராக்சைடு

mosaic clean

ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு நம்மால் எப்பேற்பட்ட அழுக்கு தரையினையும் நிமிட பொழுதில் சுத்தம் செய்ய முடியும். இதனை கொண்டு தரைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்க முடியும். இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

  • இதற்கு, 3 முதல் 4 டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தை 1 முதல் 2 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்
  • பெராக்சைடு திரவத்தை கலந்த பிறகு, 10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்
  • 10 நிமிடங்கள் கழித்து, தரையில் இந்த கலவையை ஊற்றி 5 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்
  • 5 நிமிடங்கள் கழித்து, சுத்தமான பிரஷ் கொண்டு தேய்க்கவும்

போரக்ஸ் பவுடர்

mosaic clean

போரக்ஸ் பவுடரை கொண்டு நார்மல் தரைகள் முதல் டிசைன் போட்ட தரைகள் வரை என அனைத்தையும் நம்மால் சுத்தம் செய்ய முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது,

  • மொசைக் தரையில் 1 முதல் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும்
  • இப்போது தரையில் போரக்ஸ் பவுடரை தூவவும்
  • 10 நிமிடங்கள் கழித்து, சுத்தமான பிரஷ் கொண்டு தேய்க்கவும். பிறகு தண்ணீரை ஊற்றி தரையை சுத்தம் செய்யவும்
  • உங்களுக்கு வேண்டுமெனில், வெதுவெதுப்பான தண்ணீருடன் போரக்ஸ் பவுடரை கலந்து சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்

இவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்

மொசைக் தரையை சுத்தம் செய்ய இன்னும் பிற பொருட்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். உதாரணமாக, வினிகர், டிடெர்ஜென்ட் பவுடர், டைல்ஸ் கிளீனர் அமிலம் மற்றும் அமோனியா போன்றவற்றின் உதவியுடன் நம்மால் மொசைக் தரையை சுத்தம் செய்ய முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik, shutterstock

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP