கேரள மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஓணம். அறுவடை திருநாள் என்றழைக்கப்படும் ஓணம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடும். மலையாள மக்களைப் பொறுத்தவரையில் சிங்க மாதத்தில் ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் இந்த பண்டிகையைக் கொண்டாடுவார்கள். எப்படி? இதன் வரலாறு என்ன? இந்தாண்டு எப்போது ஓணம் கொண்டாடப்படுகிறது? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.
ஓரிரு ஆண்டுகள் அல்ல கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை கிபி 861 முதல் கொண்டாடப்படுவதாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆவணி மாதம் என்றாலே குளிர்ச்சியான சூழல் நிலவும். பசுமையான சூழல் நிலவக்கூடும். இதற்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி கூறும் அறுவடை திருநாளாக மட்டுமல்ல, மகாபலி மன்னனை வரவேற்கும் திருநாளாகவும் ஓணத்தை மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Onam pookolam 2025: அழகான ஓணம் பூக்கோலம் அலங்கார யோசனைகள்
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இணைந்துக் கொண்டாடும் உன்னத திருநாள் என்று போற்றப்படுகிறது ஓணம். முன்பே கூறியது போல, மகாபலி மன்னனை ஒவ்வொரு வீட்டிற்கும் வரவழைப்பது தான் இந்த பண்டிகையின் முக்கிய அம்சம். கேரள மக்கள் தங்கள் வாழ்வியலோடு இந்த திருநாளைக் கொண்டாடி வருகிறார்கள். 10 நாட்கள் கொண்டாடும் இந்த பண்டிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளது.
பெண்கள் அதிகாலையிலே எழுந்து வீட்டின் வாயிலின் முன்பாக அத்தப்பூ கோலம் போடுவார்கள். ஆவணி மாதத்தில் இந்த பூக்கும் என்பதால் இதை முதலில் வைத்துத் தான் பூ கோலமிடுவார்கள். ஆண்கள் அத்தப்பூவைப் பறித்து வர வீட்டில் உள்ள பெண்கள் அழகான கோலமிட்டு வழிபடுவார்கள். 10 நாட்களும் ஒவ்வொரு வீட்டின் வாசல்களிலும் வண்ண மயமான பூக்கோலங்கள் கண்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கும்.
பூ கோலத்திற்கு அடுத்தப்படியாக ஓணம் என்றாலே பெண்கள் கட்டக்கூடிய கசவு சேலைகள் தான் அனைவரது நினைவிற்கு வரக்கூடும். எத்தனை கலாச்சார மாற்றங்கள் வந்தாலும் இன்றைக்கும் ஓணம் பண்டிகையின் போது அனைத்துத் தர குடும்பத்தினரும் தங்க பார்டர் உள்ள வெண்ணிற ஆடைகளை அதாவது கசவு சேலைகளை அணிந்திருப்பார்கள்.
பராம்பரிய ஆடை சாதி, மத பேதமின்றி மலையாள மக்களின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக உள்ளது. முன்பெல்லாம் தங்க பார்டர் கொண்டு இந்த சேலை நெய்யப்பட்டது. தங்கத்தின் விலை அதிகரிப்பால் தங்கம் பூசிய வெள்ளி நூல்களில் நெய்யப்படுகிறது.
மேலும் படிக்க: Onam Festival 2024: பூக்கோலம் முதல் சத்யா விருந்து சுவை வரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஓணம் பண்டிகை வரலாறு
கேரளத்தில் 10 நாள்கள் கொண்டாடப்படும் ஓணத்தில் ஒவ்வொரு நாள்களும் ஒவ்வொரு விதமான பெயர்கள் உண்டு. முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, 3 வது நாள் சுவாதி என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதோடு பிடித்தவர்களுக்கு கிப்ட்களைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வார்கள்.
மேலும் படிக்க: Colourful Onam Rangolis: மகாபலி மன்னரை வண்ணமயமான இந்த ரங்கோலி பூக்கோலங்களை வாசலில் இட்டு வரவேற்கவும்
ஓணத்தின் நான்காவது நாள் விசாகம் என்றழைக்கப்படுகிறது. இந்த நாளில் அறுசுவை விருந்து தயார் செய்வார்கள். அனுசம் என்றழைக்கப்படும் ஐந்தாவது நாளில் மிகவும் பிரசித்திப் பெற்ற படகுப் போட்டி விமர்சியாக நடைபெறும். கேரளத்து இளைஞர்கள் போட்டி போட்டிக் கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள். கேரளத்து இளைஞர்கள் மட்டுமல்லாது, இந்த படகு போட்டியைக் காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கேரளத்தை நோக்கி படையெடுப்பார்கள்.
திருக்கோட்டை என 6 வது நாளையும், மூலம் என ஏழாவது நாளையும், பூராடம் என 8 வது நாளையும், உத்தராடம் என 9 வது நாளையும் அழைத்து ஓணம் திருநாளைக் கொண்டாடுவார்கள். இறுதி நாளான 10 வது நாள் ஓணம் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும். சத்யா விருந்து வைப்பது மகிழ்வாக இருப்பதோடு, பொன் நகைகள் அணிந்து யானை ஊர்வலம் நடைபெறும்.
சாதி, மத பேதமின்றி ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இதே போன்று இந்தாண்டும் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி என தொடர்ந்து 10 நாள்களுக்கு ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. நீங்களும் கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு முறையாவது ஓணம் திருநாளில் கேரளத்துக்கு விசிட் பண்ணுங்க.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]