நீதா அம்பானியின் கார் விலை இவ்வளவா? இந்தியாவிலேயே இவரிடம் மட்டும் தான் இந்த ஆடி கார் உள்ளது!

இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவரான நீதா அம்பானி, சமீபத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
image

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, சமீபத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான ஆடி காரை வாங்கி இருக்கிறார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் பணக்காரர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்பானியின் குடும்பம் தான். குறிப்பாக, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை முறை, மும்பையில் உள்ள அவரது விலையுயர்ந்த ஆன்டிலியா வீடு மற்றும் அவரது கார் கலெக்‌ஷன் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். அந்த வகையில், நீதா அம்பானியின் கார் கலெக்‌ஷனில் புது வரவாக ஒரு விலை உயர்ந்த கார் இணைந்துள்ளது.

நீதா அம்பானியின் ரூ. 100 கோடி மதிப்புள்ள கார்:

ஆடி ஏ9 கேமிலியன் (Audi A9 Chameleon) என்ற காரின் மதிப்பு ரூ. 100 கோடி ஆகும். இந்த கார் மொத்தமாக உலக அளவில் 11 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதுமைக்கும், நேர்த்திக்கும், ஆடம்பரத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கார் விளங்குகிறது. இந்தியத் தொழில்துறையின் மிக முக்கியமான பெண்மணிகளில் ஒருவராக விளங்கும் நீதா அம்பானி, இந்தக் காரை வாங்கி இருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ரூ. 100 கோடி காரின் சிறப்பம்சங்கள்:

இந்த கார், வெறும் வாகனம் மட்டுமல்ல, ஒரு தொழில்நுட்ப அதிசயமாகும். இதன் நிறம் மாறும் வண்ணப்பூச்சுத் தொழில்நுட்பம் (colour-changing paint technology) இதை தனித்துவமாக்குகிறது. ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் காரின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியும். இந்த அம்சம், காரின் தன்மையை மேலும் அதிகரிக்கிறது.

Audi car

இதன் வடிவமைப்பு ஒரு விண்கலத்தை போல தோற்றமளிக்கிறது. காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் கூரை ஆகியவை ஒரே துண்டாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்து மீட்டர் நீளமும், இரண்டு கதவுகளும் கொண்ட இதன் வடிவமைப்பு, சாலைகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

மேலும் படிக்க: Vantara Zoo : ஆனந்த் அம்பானியின் மாஸ்டர் பிளான் ‘வந்தாரா’! வனவிலங்குகள் பாதுகாப்பில் புதிய முயற்சி

காரின் பிரம்மிக்க வைக்கும் செயல்திறன்:

இந்த காரின் வடிவமைப்பிற்கு இணையாக, அதன் எஞ்சினும் மிகவும் சக்திவாய்ந்தது. 4.0 லிட்டர் வி8 எஞ்சின் (V8 engine) பொருத்தப்பட்டிருப்பதால், 600 ஹார்ஸ்பவர் (horsepower) கொண்ட செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இது, ஒரு ஆடம்பர வாகனத்தில் எதிர்பார்க்கப்படும் சக்தி மற்றும் அதிநவீன அம்சங்களை வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தக் காரை விலைக்கு வாங்கிய ஒரே இந்தியர் நீதா அம்பானி தான்.

Audi white car

நீதா அம்பானியின் பணிகள்:

தனது ஆடம்பர வாழ்க்கைக்கு மட்டுமின்றி, சமூக பணிக்காகவும் பரவலாக அறியப்படும் பெண்ணாக நீதா அம்பானி விளங்குகிறார். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவராகவும், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் நிறுவனராகவும் நீதா அம்பானி பொறுப்பு வகிக்கிறார். மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநராகவும், மும்பை அகாடமி ஆஃப் மூவிங் இமேஜின் இணைத் தலைவராகவும் இருக்கிறார். இது மட்டுமின்றி இந்திய கலை மற்றும் கலாசாரத்தை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், நீதா முகேஷ் அம்பானி கலாசார மையம் (NMACC) என்ற அமைப்பை கடந்த 2023-ஆம் ஆண்டு நிறுவி இருக்கிறார்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP