தீபாவளி வந்தாச்சு. என்ன தான் கடைகளில் விதவிதமாக ஆடைகள் வந்தாலும் இளையர்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுப்பது புடவைகள் தான். சேலை கட்டும் பெண்கள் எப்போதுமே அழகாக தெரிவார்கள். இதுபோன்று புடவைகள் மீது அதிக ஆசைக் கொண்ட பெண்களுக்காகவே இந்தாண்டு தீபாவளிக்கு புதுவிதமான பல கலெக்ஷன் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புடவைகளின் லிஸட்டுகளில் சில உங்களுக்காக..
இன்றைய பெண்கள் கனமான புடவைகளை விட லேசான புடவைகளைத் தான் அதிக ஆர்வத்துடன் கட்டுவதற்கு விரும்புகிறார்கள். இவற்றில் ஒன்றாக உள்ளது ஜார்ஜெட் புடவைகள். பாரம்பரிய மற்றும் இக்காலத்துக்கு ஏற்ப வந்துள்ள புடவைகள் இந்தாண்டு தீபாவளிக்கு டிரெண்டிங்கில் உள்ளது. பார்ப்பதற்கு ஆடம்பரமானதாக இல்லையென்றாலும் தீபாவளி போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்றதாக புடவைகள் அமைகிறது.
எப்போதும் உள்ள புடவைகள் போன்றில்லாமல் விதவிதமாக லைட் கலர்களில் விற்பனையில் உள்ளது கொரியன் டிஸ்சு சேலைகள். பார்ப்பதற்கு எவ்வித ஆடம்பரம் இல்லாமல் ப்ளைன் சேலைகளாக வந்தாலும் ஜாக்கெட்டுகளில் டிசைன்களுடன் வருகிறது. தீபாவளிக்கு அனைத்து கடைகளிலும் டிரெண்டிங்கில் உள்ளது. இப்புடவைகளின் ஆரம்ப விலை ரூ. 1200 லிருந்து விற்பனைக்கு வருகிறது.
மேலும் படிக்க: Jackfruit Benefits: பெண்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பொக்கிஷமாக இருக்கும் பலாப்பழ நன்மைகள்
ஆர்கன்சா என்ற புடவையின் பெயரே நம்முடைய நமக்கு புதுவிதமான பிரகாசத்தைக் கொடுக்கிறது. அதற்கேற்றால் போல் தான் கைத்தறி நெசவு செய்து அதிநவீன காலத்திற்கு ஏற்ப விற்பனைக்கு வருகிறது. ஒவ்வொரு பெண்களின் வீட்டு அலமாரிகளையும் அலங்கரிக்கும் வகையில் லைட்வெயிட் புடவைகளாக உள்ளதால் சமீப காலங்களால் பெண்களிடம் டிரெண்டிங்கில் உள்ளது. தீபாவளிக்கும் டிரெண்டிங்கில் உள்ள புடவைகளில் ஒன்றாக உள்ளது.
தெலுங்கானாவில் இருந்து கைத்தறி செய்யப்பட்டு டிரெண்டிங்கில் உள்ள புடவைகளில் ஒன்றாக உள்ளது போச்சம்பள்ளி. பாரம்பரிய தறிகளைக் கொண்டு நெய்யப்படும் இந்த சேலைகளின் வடிவமும், வடிவமைப்புகளும் பல நூற்றாண்டுகள் பழமையானவையாக உள்ளது. பாரம்பரிய டை & டை செயல்முறையில் பல்வேறு வடிவங்களில் நெசவு செய்யப்படுகிறது.
பழங்காலத்து பெண்கள் முதல் இக்காலத்து பெண்கள் வரை அனைவரும் விரும்பி அணியும் புடவைகளில் ஒன்றாக உள்ளது ப்ரண்டட் புடவைகள். இதற்கேற்ப கைத்தறி நெசவாளர்கள் பல ஸ்டைல்களில் புடவைகளை நெசவு செய்கின்றனர். மலர் வடிவங்கள், கலம்கரி போன்ற பல்வேறு டிசைன்களில் புடவைகள் விற்பனைக்கு வருகிறது.
மேலும் படிக்க: Temple Jewellery Collection: பெண்கள் அதிகம் அணிய ஆசைப்படும் டெம்பிள் ஜூவல்லரிகளின் புதிய கலெக்சன்கள்
இதே போன்று இந்த தீபாவளிக்கு உங்களை மேலும் டிரெண்டியாக மாற்றுவதற்கு ஏற்ப கானாடுகாத்தான் புடவைகள்,இளம்பிள்ளை சேலைகள், மல்பெரி, டஸ்ஸார், எர்ரி, மூகா, அமெரிக்கன் டிஸ்சு புடவைகள் என பல விதமான புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அப்புறம் என்ன? இந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட ரெடியாகுங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]