herzindagi
image

Temple Jewellery Collection: பெண்கள் அதிகம் அணிய ஆசைப்படும் டெம்பிள் ஜூவல்லரிகளின் புதிய கலெக்சன்கள்

டெம்பிள் ஜூவல்லரி என்பது பாரம்பரிய மற்றும் நவீன நகைகளின் சேர்த்து அமைக்கப்படுகிறது. பராம்பரிய அழகு மற்றும் நீண்ட ஆயுளை கொண்ட நகைகளை தேர்வு செய்கிறீர்கள் என்றால் இந்த நகை சிறந்த தேர்வாகும்.
Editorial
Updated:- 2024-10-03, 00:44 IST

அழகான டெம்பிள் ஜூவல்லரிகள் காலத்தால் அழியாத நேர்த்தி மற்றும் கலாச்சார பண்புகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இந்த வகையான நகைகளை துல்லியமாக மற்றும் ஆர்வத்துடன் வடிவமைக்கப்படும்.  இந்த வகையான நகைகளில் ஆன்மீகம் மற்றும் இணையற்ற அழகும் இருக்கும். விசேஷ நாட்களில் சரியான தேர்வாக இந்த வகை நகைகள் அமைகிறது. டெம்பிள் ஜூவல்லரிகள் என்பது நம்பகத்தன்மை மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதில் பங்களிக்கிறது. இந்தியக் கோயில்களில் காணப்படும், தெய்வீக அழகு மற்றும் ஆன்மிகத்தின் சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. கிளாசிக் டிசைன்கள் முதல் தற்காலத்தை வெளிப்படுத்தும் வடிவில் உருவாக்கப்படுகிறது. 

 

மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்குத் தக்காளி கொடுக்கும் கேரண்டி... மறக்காமல் இந்த 4 வழிகளில் ட்ரை பண்ணுங்கள்

டெம்பிள் மாம்பழ நெக்லஸ்

temple jellewry 5

சிவப்பு கற்கள் பதித்த டெம்பிள் நெக்லஸ் பராம்பரியம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நுணுக்கமான வடிவமைப்புகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த நெக்லஸ் அழியாத அழகை கொண்டியிருக்கிறது. தூய தங்கம் மற்றும் பாரம்பரிய அரக்கு கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நுட்பமான தங்க இலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அழகிய நெக்லஸ் பழங்காலத்தையும், இந்த கால புதுமையையும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மாம்பழம் வடிவம் நீண்ட கால கலாச்சாரத்தைக் கொண்ட வடிவமாக இருந்து வருகிறது. சிறப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டால் இந்த அழகிய டெம்பிள் ஜூவல்லரியை தேர்ந்தெடுக்கலாம். நீங்களும் டெம்பிள் நெக்லஸை தேர்வு செய்தால் இந்த மாம்பழ நகை சிறந்த தேர்வாக இருக்கும். கோவில் விஷயங்களில் கலந்து கொண்டால் இந்த நெக்லஸ் சிறப்பு கூட்டும்.

 

டெம்பிள் ஹராம் ஜூவல்லரி

temple jellewry 4

 

வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை கற்கள் பதித்த அந்த அழகிய ஹராம், நுணுக்கமான வடிவமைப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நகைகளில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஹராம் நேர்த்தியான மாம்பழ வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது. நுணுக்கமான கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகை இதயத்தை நிச்சயமாக கவரும்.தூய வெள்ளியால் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த மாம்பழ ஹரம் பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் சமகால நேர்த்தியின் சரியான கலவையைக் காட்டுகிறது. இந்த ஹராம் பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகளுக்கும் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகைகளை விரும்புபவருக்குக் கண்டிப்பாக இந்த ஹராத்தை விரும்புவார்கள். இந்த ஹராம் அணிபவர்கள் வசீகர தோற்றத்தைக் கொண்டு இருப்பார்கள்.

கனமான டெம்பிள் நகைகள்

temple jellewry

 

நேர்த்தியான தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கனமான மற்றும் நீளமான கோயில் நகைகள் பிரமிக்க வைக்கும் பாரம்பரிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகையான நகைகளும் நீண்ட நெக்லஸ் ஒன்று அதற்கு இணை சேர்க்கும் வகையில் குறுகிய வடிவமைப்பில் குறுகிய வடிவில் கழுத்தை ஒட்டிய வடிவில் நெக்லஸ் மற்றும் அதற்கு ஏற்றது போல் காதணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: 10 வயது குறைந்து இளமையாகத் தெரிய இந்த கொரியன் அரிசி கிரீம் ட்ரை பண்ணுங்கள்


நீண்ட வடிவம் கொண்ட நகைகள்

temple jellewry 2

 

நுணுக்கமான வடிவமைக்கப்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பழங்கால வடிவமைப்பைக் கொண்ட கோயில் நீண்ட நகைகள் பார்க்க மட்டுமல்ல, அணிந்தால் அத்தனை அழகை கொடுக்கும். எந்த ஆடைக்கும் இந்த நகைகள் அழகை சேர்க்கும். இந்த நேர்த்தியான நகைகள் காலமற்ற வசீகரத்தைக் கொண்டுள்ளது.

 

நீண்ட ராணிஹார் டெம்பிள் ஜூவல்லரி

temple jellewry 3

 

இந்த நீண்ட ராணிஹார் டெம்பிள் ஜூவல்லரி ஆடம்பரமான தோற்றத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காலத்தால் அழியாத வடிவமைப்பைக் கொண்ட பல தலைமுறைகளைத் தாண்டியும் அழகு குறையாமல் கண்களுக்கு அழகை சேர்க்கிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு இந்த கோவில் நகைகள் அணிந்தால் அழகை சேர்க்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik & Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]