குழந்தையின் சில பழக்க வழக்கங்கள் நம்மை வருத்தமடைய செய்யும். மூக்கினுள் விரல் விடும் பழக்கமும் இதில் ஒன்று. பல நேரங்களில் குழந்தை உணவு உண்ணும்போது கூட மூக்கினுள் விரல் விடுவதை பார்த்திருப்போம். இது சரியான பழக்கம் அல்ல.
இந்த பழக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்க சில குறிப்புகளை இங்கே பகிர்கிறோம். இவற்றை நீங்கள் முறையாகப் பின்பற்றினால் மூக்கினுள் விரல் விடும் அவர்களின் பழக்கத்தைக் குறைக்கலாம்.
குழந்தையின் சில பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் எந்த காரணமும் இருக்காது. ஆனால் சில நேரங்களில் குழந்தை தனது முகத்தை அடிக்கடி தொடுவதற்கு பின்னால் வேறுசில காரணங்களும் இருக்கலாம். உங்கள் குழந்தை உங்களிடம் சொல்ல முடியாமல், திடீரென மூக்கினுள் விரலை விட்டால் அதற்கான காரணத்தைக் கண்டுப்பிடியுங்கள். மூக்கில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம் அதனால் குழந்தைக்கு வலி ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
குழந்தை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும்போது தனது கைகளை வாய் மற்றும் மூக்கில் வைப்பதை பார்த்திருப்போம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தைக்கு எதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருங்கள். ஆர்வமாக விளையாடும்போது மூக்கில் விரலை விடமாட்டார்கள், அப்படியே படிப்படியாக இந்தப் பழக்கம் முடிவுக்கு வந்து விடும்.
இந்த பதிவும் உதவலாம்: பிள்ளைகள் தவறான வார்த்தைகளை பேசும்போது, பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
குழந்தையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் முழு பொறுப்பும் பெற்றோருடையது. சில நேரங்களில் மூக்கு அழுக்குடன் இருப்பதால் அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்படும். ஆகையால், உங்கள் குழந்தையின் மூக்கை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
சளி காரணமாக உங்கள் குழந்தை மூக்கில் விரலை வைத்தால் உடனே ஒரு கைக்குட்டையைக் கொடுத்துப் பழகுங்கள். சிறு பிள்ளைகளின் ஆடையில் கைக்குட்டை இணைத்து அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்கான காரணம் இதுதான்.
இந்த பதிவும் உதவலாம்: உங்களுடைய பிள்ளைகள் படிப்பதற்கு சிரமம் கொள்கிறார்களா? இந்த டிப்ஸை முயன்று பார்க்கலாமே!
குழந்தைகள் மூக்கினுள் விரல் விடும் பழக்கத்தைத் தடுப்பதற்கான குறிப்புகள் இவைதான். இந்த பதிவு குறித்த உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரியப்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]