பிள்ளைகள் தவறான வார்த்தைகளை பேசும்போது, பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

பிள்ளைகள் தவறான வார்த்தையை சுற்றியுள்ளவர்களிடம் இருந்தே கற்றுக்கொள்வார்கள். இதனை எப்படி மாற்றுவது? படித்து பயன் பெறலாம்.

kids speak big

பிள்ளைகள் தவறான வார்த்தைகளை பேசும்போது, பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

பிள்ளைகள் தவறான வார்த்தையை சுற்றியுள்ளவர்களிடம் இருந்தே கற்றுக்கொள்வார்கள். இதனை எப்படி மாற்றுவது? படித்து பயன் பெறலாம்.

இளம்பிள்ளைகள் எப்போதுமே அப்பாவியாக இருப்பார்கள். அவர்கள் வளரும்போது வெகுளித்தனமாக பல வார்த்தைகளை கற்றுக்கொள்ள தொடங்குகின்றனர். பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் வரை என, டியூசன் வகுப்பிலும் அவர்கள் பல விஷயங்களை பலரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றனர். பல புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டு, அவற்றை பேசவும் செய்கின்றனர்.

பிள்ளைகளுக்கு எப்போதுமே பெரியவர்களை பின்தொடர ஆவல் இருக்கும். அதனால், ஒரு வார்த்தைக்கான அர்த்தம் தெரியாமலே அதனை பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர். அதேபோல தான், அவர்கள் பெரியவர்களை பார்த்து பல விஷயங்களை செய்ய நினைப்பதோடு, அவர்கள் பேசுவதையே பேசவும் ஆசை கொள்கின்றனர்.

பிள்ளைகள் தவறான வார்த்தைகள் பேசும்போது அல்லது தவறான செயல்பாடுகளில் ஈடுபடும்போது அது பெற்றோர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. அதுவும் நம் முன்னால் அவர்கள் அப்படிப்பட்ட தவறான வார்த்தைகளை பேசும்போது, ஒரு நிமிடம் ஆச்சரியமாகவும், கவலையாகவும் இருக்க செய்யும். அந்த மாதிரியான சூழலில், நாம் அவர்களை அடித்து விடுவோம். அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் வரை குத்திக்காட்டி பேசவும் செய்வோம். இவ்வாறு செய்வதால், பிள்ளைகள் அமைதியடைவர். ஆனால், அந்த பழக்கத்தை விட்டு அவர்களால் நிரந்தரமாக வெளியில் வர முடிவதில்லை. இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க, வேறு சில வழிகளை தான் நாம் பின்பற்ற வேண்டும். அது என்னவென்பதை தொடர்ந்து நாம் அறிவோம்.

அளவுக்கு அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்துதல்

kids speak

இதனை நாம் வீடுகளில் பார்த்திருப்போம். நம்முடைய பிள்ளைகள் தவறாக ஏதாவது பேசிவிட்டால், உடனடியாக திட்டுவோம். இல்லையேல், அது குறித்து அளவுக்கு அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்துவோம். ஆனால் அவ்வாறு செய்யாதீர்கள். அவர்கள் விபரம் அறியாமல் ஒரு சில வார்த்தையை பேசி விடுவதுண்டு. அவர்கள் பேசிவிட்டு அப்போதே மறந்துவிடுவார்கள். ஆனால், நாம் அவர்களை திட்டும்போதும், திரும்ப திரும்ப சொல்லும்போதும் அவர்கள் ஆழ் மனதில் அந்த வார்த்தை பதிந்துவிடும். நீங்கள் அவர்கள் மீது கோபம் கொள்வீர்கள். ஆனால், அவர்களோ நீங்கள் எதற்காக கோபம் கொள்கிறீர்கள் என்பது புரியாது, அந்த வார்த்தைகள் குறித்து அளவுக்கதிகம் சிந்திக்க தொடங்கிவிடுவர்.

இந்த மாதிரியான சூழலில் பக்குவமாக அவர்களிடம் பேசவும். அந்த தவறான வார்த்தையை அவர்கள் எங்கே கேட்டார்கள் என்பதனை தெரிந்துக்கொள்ளவும். அதோடு, அந்த வார்த்தையினால் ஏற்படக்கூடிய தீமைகளையும் நாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

வீட்டு சுற்றுச்சூழல் குறித்து கவனம் கொள்ளுதல்

kids speak

நம் பிள்ளைகளுக்கு முதல் பள்ளி, நம்முடைய வீடு தான். பல சமயம், நாமே அவர்கள் முன்பாக அமர்ந்து தேவையற்ற வார்த்தைகளை பேசி விடுவோம். அவ்வாறு செய்யும்போது, பிள்ளைகள் நாம் செய்ததையே திரும்ப செய்வார்கள். அதனால், பிள்ளைகள் முன்பாக பேசும்போது கவனம் வேண்டும். அதேபோல பிறருக்கு மரியாதை அளிக்கும் வார்த்தைகளான ப்ளீஸ், தேங்க் யூ போன்ற சொற்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கவும். இது அவர்களிடம் பணிவான நற்குணம் வளர உதவும்.

தவறாக பேசும்போது கேலி செய்தல்

kids speak

இந்த தவறை பல பெற்றோரும் செய்கின்றனர். பிள்ளைகள் அப்பாவி தனமாக ஏதாவது தவறான வார்த்தையை பயன்படுத்தினால், உடனே நாம் சிரிக்க செய்வோம். இது அவர்களிடம் ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் பல தவறான வார்த்தைகளை அவர்கள் பேசவும் ஊக்குவிக்கிறது.

அவர்கள் இது போன்ற வார்த்தைகளை எப்படி கற்றுக்கொள்கிறார்கள் என்பதில் கவனம் வேண்டும். நல்ல வார்த்தைகளையும், தவறான வார்த்தைகளையும் பிரித்து பார்க்கும் பக்குவத்தை நாம் தான் அவர்களுக்கு அளிக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு அந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா என்பதை கேட்கவும். அவர்கள் இல்லை என்று கூறினால், அந்த வார்த்தையினால் விளையும் தீமையை பக்குவமாக எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.

அவர்களை கண்காணித்தல்

kids speak

இன்றைய பிள்ளைகள், நமக்கே தெரியாமல் நம் மொபைலை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அவர்கள் பலவற்றை ஆன்லைனிலும், ஆப்லைன் உலகிலும் கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் தவறான வார்த்தைகளை கற்றுக்கொள்ள இவை அதிக வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள், எவற்றை கற்றுக்கொள்கின்றனர் என்பதை நாம் எப்போதும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதையும் நாம் கண்காணித்தல் வேண்டும்.

புது வார்த்தைகளை தேடுதல்

kids speak

சில சமயத்தில் அவர்கள் கோபம் கொள்ளும்போது தவறான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். நம்முடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அவர்கள் தவறான வார்த்தைகளை பேசுகின்றனர். அதனால், அவர்களோடு அமர்ந்து அவர்கள் பேசும் தவறான வார்த்தைகள் எவை என்பதனை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக நல்ல வார்த்தைகளை பேச நாம் ஊக்குவிக்க வேண்டும். இது அவர்கள் நல்ல அகராதி சொற்களை கற்றுக்கொள்ள பெரிதும் உதவும்.

பெற்றோர்களே! இப்போது முதலே அவர்கள் பழக்கவழக்கம் குறித்து ஒவ்வொரு படியாக வாழ்வில் மேல்நோக்கி அழைத்து செல்லுங்கள். தவறான வார்த்தைகள் பேசுவதில் இருந்து அவர்கள் கவனத்தை திசை திருப்புங்கள். அவர்களுடைய சொற்களையும், செயல்களையும் மேம்படுத்த உதவுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யவும், ஷேர் செய்யவும், கமெண்ட் செய்யவும். மேலும், எங்கள் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image Credit: shutterstock, freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP