herzindagi
women savings budget main

Budget Announcement for Women in Tamil: பெண்களுக்கான புது சிறுசேமிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023ல் பெண்களுக்காக வெளியான சிறந்த அறிவிப்புகள் குறித்து பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-02-02, 13:41 IST

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று (31.01.23) தொடங்கியது. இதையடுத்து கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரிச்சலுகை, மானியத்தொகை என பட்ஜெட் குறித்த பல எதிர்பார்ப்புகள் இருந்தன. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஏற்கெனவே பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.

இந்நிலையில் பெண்களுக்கான சில அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதுக்குறித்து விரிவாக பார்ப்போம்.

  • பெண்களின் கல்வி மேம்பாட்டை உயர்த்தும் வகையில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
  • 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: பட்ஜெட்டில் வெளியான சிறந்த அறிவிப்புகள்

fm nirmala

  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டி தரப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • பட்ஜெட்டில் பெண்களை கவரும் வகையில் குழுக்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
  • மீன் விற்பனையாளர்கள் மீன் சார்ந்த தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் வளர்ச்சிக்கு ரூ 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 7.5% வட்டி விகிதத்தில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ’மகிளா சம்மான்’ என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: இந்தியாவை வழிநடத்தும் 'சப்த்ரிஷி’

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]