நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஐந்தாவது மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெண்களின் பொருளாதாரம் மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் நிதி உதவி, திறன் பயிற்சி, டிஜிட்டல், பசுமை நுட்பங்கள், பிராண்ட் ஊக்குவிப்பு, டிஜிட்டல் பணம் செலுத்துதல், சமூக பாதுகாப்பு போன்ற முன்னேற்றங்கள் பற்றி பேசியுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முன்னுரிமைகளை பட்டியலிட்டு, அவற்றை 'சப்த்ரிஷி' என்று நிர்மலா சீதாராமன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அனைத்து துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த 7 முன்னுரிமைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பல்வேறு பொருளாதார துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பசுமையான எரிபொருள், ஆற்றல், விவசாயம் மற்றும் இயக்கம் போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய மாசுபடுத்தும் மத்திய அரசின் வாகனங்களை மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மாநிலங்களுக்கும் ஆதரவு அளிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த முன்னுரிமைகள் பெண்கள், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் வளர்ச்சியை எளிதாகியுள்ளது. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை கொண்டு வருபவர்களுக்கு அதற்கான நிதி வழங்கப்படும் திட்டம் போன்ற பல பாராட்டுக்குரிய விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: சிறு சேமிப்பில் எது சிறந்தது என உங்களுக்கு தெரியுமா?
நிதியமைச்சர் பட்டியலிட்ட 7 பட்ஜெட் முன்னுரிமைகள்
- உள்ளடக்கிய வளர்ச்சி
- கடைசி மைலை அடையும் வரை போராடுவது
- உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு
- திறனை வெளிக்கொண்டு வருவது
- பசுமை வளர்ச்சி
- இளைஞர் சக்தி
- நிதித் துறை
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation