Union Budget 2023 in Tamil: பட்ஜெட் 2023 - வெளியிடப்பட்ட சிறந்த அறிவிப்புகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சிறந்த அறிவிப்புகளை பற்றி இங்கு காணலாம்.

 
budget main
  • அனைத்து நகரங்களிலும் மனித கழிவுகளை அகற்ற புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
  • நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரயில்வே துறை மேம்பாட்டிற்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, புதிய வழித்தட ரயில் திட்டங்களுக்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சிகிரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களு 16% வரை வரி உயர்த்தப்படும் என அறிவிப்பு.
  • புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
uinon budget
  • பெண்களுக்காக Mahila Samman Saving scheme (மகிளா சமன் சேமிப்புத் திட்டம்) தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டமானது மார்ச் 2025 வரை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வைப்புத் தொகைக்கு இந்தத் திட்டம் 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும்.
  • சிறு, குறு தொழில் செய்பவர்களின் கடன் வட்டியை 1 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாட்டில் உள்ள எல்லையோர கிராமங்களின் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தபடும்.
  • வரிவிலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் ஆக உயர்வு.
  • தனி நபர் வருமான வரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • ரூபாய் 0 முதல் 3 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு வரி இல்லை
  • ரூபாய் 3 - 6 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு - 5%
  • ரூபாய் 6 - 9 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு - 10%
  • ரூபாய் 9 -12 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு - 15%
  • ரூபாய்12 - 15 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு - 20%
  • ரூபாய் 15 லட்சம் மேல் வாங்குபவர்களுக்கு - 30%
  • தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிப்பு.
  • மொபைல், கேமரா மற்றும் டிவி உதிரி பாகங்கள் ,மொபைல் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு. இதனால் இந்த பொருட்களின் விலை குறையலாம் என்று எதிர்பாக்கப் படுகிறது.
  • கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10000 கோடி நிவாரணம் வழங்கப்படும்.
  • சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதற்கு ரூ.9000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இளைஞர்களின் வளர்ச்சியை மையமாக கொண்டு புதிய கல்விக்கொள்கை. மேலும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு.
  • மூத்த குடிமக்களின் சேமிப்பு வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயரத்தப்பட்டுள்ளது.
  • தினை ஏற்றுமதியில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதால், சிறுதானியங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.


Image source: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP