எவ்வளவு தேய்த்தாலும் கறை போகலையா? ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தம் செய்ய டிப்ஸ் இதோ

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் பல வருடங்களுக்கு பளபளப்பாக இருக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாவிட்டால், இவை கறைபடிந்தோ, மங்கலானதாகவோ தோன்றலாம். 
image

நம் வீடுகளில் பெரும்பாலும் சமையலுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் தான் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் பல வருடங்களுக்கு பளபளப்பாக இருக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சரியான பராமரிப்பு இல்லாவிட்டால், இவை கறைபடிந்தோ, மங்கலானதாகவோ தோன்றலாம். இதைத் தவிர்க்க, சில எளிய முறைகளைப் பின்பற்றினால் உங்கள் பாத்திரங்கள் எப்போதும் புதிதுபோல் இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை எளிதில் சுத்தம் செய்ய உதவும் டிப்ஸ் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மிதமான தண்ணீர் மற்றும் திரவ சோப்பைப் பயன்படுத்தவும்:


ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் மிதமான தண்ணீரில் திரவ சோப்பு கலந்து நுரை உண்டாக்கவும். இதற்கு பிறகு மென்மையான தூரிகை அல்லது கடற்பாசி மூலம் பாத்திரத்தை துடைக்கவும். நீங்கள் கடினமான ஸ்கிரபர்கள் பயன்படுத்தினால் பாத்திரத்தில் கீறல்கள் ஏற்படலாம்.

வினிகர் மற்றும் எண்ணெய்:


பாத்திரங்களின் பளபளப்பை மீண்டும் பெற வினிகர் மற்றும் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். ஒரு துணியில் சிறிது வினிகர் தடவி, பாத்திரத்தை துடைக்கவும். பிறகு, ஆலிவ் எண்ணெய் அல்லது மண்ணெண்ணெய் தடவி மென்மையான துணியால் துடைக்க வேண்டும். இது பாத்திரத்தின் இயற்கையான பிரகாசத்தை திரும்பப் பெற உதவும்.

italian-olive-oil-vinegar-480476

பேக்கிங் சோடா மூலம் கடினமான கறைகளை நீக்கவும்:


உணவு பிடித்து கடினமான கறைகள் ஏற்பட்டிருந்தால், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரைக் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்டை பாத்திரத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் விட்டுவிட்டு, பிறகு மென்மையான தூரிகை மூலம் தேய்க்கவும். இது பாத்திரத்தில் கறைகளை எளிதாக நீக்கும்.

உப்பு மற்றும் எலுமிச்சை:


ஒரு எலுமிச்சையை பாதி வெட்டி, அதன் மேல் உப்பு தூவி, பாத்திரத்தில் தேய்க்கவும். எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் மற்றும் உப்பின் சிராய்ப்புத் தன்மை கறைகளை நீக்க உதவுகிறது. இந்த முறை இயற்கையானதாக இருப்பதால், பாத்திரங்களுக்கு எந்த பக்க விளைவும் இருக்காது.

41bhzDCLDoL._AC_UF1000,1000_QL80_

குளோரின் அடங்கிய பொருட்களை தவிர்கவும்:


ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் குளோரின் அடங்கிய பிளீச் அல்லது கடுமையான கெமிக்கல்கள் பயன்படுத்தக்கூடாது. இவை பாத்திரத்தின் மேற்பரப்பை சேதப்படுத்தி, கருப்பு அல்லது பழுப்பு நிற கறைகளை ஏற்படுத்தலாம். இதற்கு பதிலாக மிதமான சோப்பு அல்லது இயற்கை முறைகளையே பயன்படுத்தவும்.

பாத்திரங்களை சரியாக உலர வைக்கவும்:


ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை சுத்தம் செய்த பிறகு, பாத்திரங்களை காற்றில் உலர விடவும் அல்லது மென்மையான துணியால் துடைக்கவும். ஈரமான நிலையில் பாத்திரங்களை சேமித்தால், அதில் தண்ணீர் தடயங்கள் ஏற்படலாம். எனவே, முழுமையாக உலர்ந்த பிறகே மூடி வைக்கவும்.

மேலும் படிக்க: கறை படிந்த பாத்ரூம் பளிச்சுனு மாற; இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்

இந்த எளிய முறைகளை பின்பற்றினால், உங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் எப்போதும் புதியதுபோல் பிரகாசிக்கும். கடினமான கெமிக்கல்கள் பயன்படுத்தாமல், இயற்கை முறைகளில் சுத்தம் செய்வது பாத்திரங்களின் ஆயுளை நீட்டிக்கும். வாரம் ஒரு முறை இதுபோன்ற பராமரிப்பு முறைகளை பின்பற்றி, உங்கள் பாத்திரங்களை அழகாக வைத்திருங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP