கறை படிந்த பாத்ரூம் பளிச்சுனு மாற; இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்

சந்தையில் பல பாத்ரூம் க்ளீனர்கள் கிடைக்கின்றன, ஆனால் வீட்டிலேயே இயற்கையான மற்றும் மலிவான க்ளீனர்களை தயாரிப்பது சிறந்தது. சில எளிமையான, நச்சு இல்லாத பொருட்களை பயன்படுத்தி உங்கள் குளியலறையை பிரகாசமாகவும் புதுமையாகவும் வைத்திருக்கலாம்.
image

வீட்டை சுத்தமாக வைப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல நம் வீட்டில் பாத்ரூம் கூட சுத்தமாக வைக்க வேண்டும். நம் வீட்டின் குளியலறை மற்றும் கழிவறையில் தங்கும் நுண்ணுயிரிகள் பல்வேறு நோய்களுக்கு மூலகாரணமாக அமைகின்றன. எனவே குளியலறையை தூய்மையாக சுத்தமாக வைத்திருப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு முதன்மையான தேவையாகும்.


குளியலறை அழுக்கின் முக்கிய காரணங்கள்:


தினசரி பயன்பாடு மற்றும் நீரில் உள்ள கனிமங்கள் குளியலறை மேற்பரப்புகளில் விரைவாக கறைகளை ஏற்படுத்துகின்றன. மேலும் சோப்பு, ஷாம்பூ போன்ற பொருட்களின் கெமிக்கல் பொருட்கள் குளியலறை தரையை மிகவும் வழுவழுப்பாக மாற்றிவிடுகின்றன.

தூய்மையின்மையின் பக்க விளைவுகள்:


இந்த அழுக்குகளை சரியாக சுத்தம் செய்யாதபோது பாத்ரூமில் துர்நாற்றம் வீசத் தொடங்கும், சுற்றுச்சூழல் சுகாதாரம் கெடும் மற்றும் குறிப்பாக குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்பு உண்டு.


குளியலறை தூய்மையை பராமரிப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முதல் காவலாகும். சந்தையில் பல பாத்ரூம் க்ளீனர்கள் கிடைக்கின்றன, ஆனால் வீட்டிலேயே இயற்கையான மற்றும் மலிவான க்ளீனர்களை தயாரிப்பது சிறந்தது. சில எளிமையான, நச்சு இல்லாத பொருட்களை பயன்படுத்தி உங்கள் குளியலறையை பிரகாசமாகவும் புதுமையாகவும் வைத்திருக்கலாம்.

சுத்தம் செய்யும் பவுடர்:


1 கப் பேக்கிங் சோடா, 1 கப் போராக்ஸ் மற்றும் 1 கப் கல் உப்பு ஆகியவற்றை கலந்து ஒரு ஜாடியில் வைக்கவும். தேவையான இடத்தில் தூவி, ஸ்பான்ஜ் கொண்டு தேய்க்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரால் கழுவவும்.


டாய்லெட் பவுல் க்ளீனர்:


1/4 கப் போராக்ஸ் அல்லது பேக்கிங் சோடாவையும் 1 கப் வினிகரையும் டாய்லெட்டில் ஊற்றவும். 15 நிமிடங்கள் விட்டுவிட்டு, நன்றாக தேய்த்து ஃப்ளஷ் செய்யவும்.

420682-bathroomcleaning1

கண்ணாடி க்ளீனர்:


ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 1/4 கப் வினிகர் மற்றும் 4 கப் சூடான தண்ணீரை கலக்கவும். கண்ணாடி மற்றும் வாஷ் பேசினில் ஸ்ப்ரே செய்து, உலர்த்திய துணி அல்லது செய்தித்தாளால் துடைக்கவும்.


டிரெய்ன் க்ளீனர்:


1/2 கப் பேக்கிங் சோடா மற்றும் 1 கப் வினிகரை கலந்து பாத்ரூம் டிரெய்னில் ஊற்றவும். 15 நிமிடம் (அல்லது அதற்கு மேல்) விட்டுவிட்டு, சூடான தண்ணீரால் கழுவவும். தேவைப்பட்டால் இதை வாரம் இரண்டு முறை மீண்டும் செய்யவும்.

various-types-of-floor-drains-for-bathrooms

தரை சுத்தம் செய்யும் க்ளீனர்:


2 கப் சூடான தண்ணீரில் 1/2 கப் போராக்ஸை கலக்கவும். இதை உங்கள் வீட்டு பாத்ரூம் தரையில் தெளித்த பிறகு மாப் அல்லது ஸ்பான்ஜ் கொண்டு துடைக்கவும். இதை தண்ணீரில் கழுவ தேவையில்லை.

மேலும் படிக்க: எவ்வளவு தேய்த்தாலும் கண்ணாடி அழுக்கா இருக்கா? இனிமே இதை ட்ரை பண்ணுங்க

பூஞ்சை அகற்றும் க்ளீனர்:


1/2 கப் போராக்ஸ் மற்றும் 1/2 கப் வினிகரை கலந்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும். பிரஷ் அல்லது ஸ்பான்ஜ் கொண்டு தேய்த்து, தண்ணீரால் கழுவவும். கடினமான பூஞ்சைக்கு 1 மணி நேரம் விட்டுவிட்டு கழுவவும்.


இந்த எளிய DIY க்ளீனர்களைப் பயன்படுத்தி உங்கள் குளியலறை மற்றும் கழிவறையை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP