Diwali Rangoli Designs: தீபாவளிக்கு வீட்டு வாசலை அலங்கரிக்கும் பிரமாண்ட ரங்கோலிகள்

தீபாவளி பெஷல் ரங்கோலி கோலங்கள். அனைவரும் எளிதாக இந்த கோலங்களைப் பண்டிகைக்கு எப்படி போடல் என்பதை பார்க்கலாம். இந்த ரங்கோலி கோலம் இட்டு தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும்
image

காலையில் வீட்டு வாசலில் பெண்கள் புள்ளிகள் இட்டு கோலம் போடுவதால் லட்சுமி தேவி வாசம் செய்வார் என்று நம்பப்படுகிறது. தென்னிந்தியாவில் கோலம் இடுவது மிக முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது. கோலம் என்பது வாசலில் அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு பாசிடிவ் எனர்ஜியை தரக்கூடியது. புள்ளி கோலம், கம்பிக்கோலம் என்று இரண்டு வகையில் பெண்கள் கோலம் இடுவார்கள். இதில் தனித்துவம் பெற்றது ரங்கோலி கோலம். ரங்கோலி கோலம் அனைத்து மக்களாலும் விரும்பப்படுகிறது. ரங்கோலி கோலத்தைப் பல வகையில் வரைகிறார்கள். பூக்கோலம், வண்ண நிற மாவுக்கோலம் என இந்த வகை கோலம் நேர்த்தியான வடிவத்தை எடுக்கும் ஆற்றால் கொண்டது. கோலம் இடத்தெரியதவர்கள் கூட இந்த ரங்கோலிக்கோலத்தை பார்த்தால் விரும்புவார்கள்.

தீபாவளி பண்டிகைக்குப் பெண்கள் வாசலில் விதவிதமான கோலம் இடுவார்கள். இதற்காகப் பல மணி நேரம் தேவைப்படும். கோலத்திற்கு நேரம் செலவழிக்காமல், எளிய கோலங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இவை பார்க்க அழகாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும். இந்த எளிய வகை 5 கோலங்களைப் பார்க்கலாம்.

சதுரம் வடிவ மாவுக்கோலம்

rangoli

படத்தில் இருக்கும் படி சதுரம் வடிவத்தை மெல்லிய கோடுகள் ஈட்டு நேராக வரைய வேண்டும். அந்த கோடுகளுக்கு மேல் சிறிது சிறிதாகக் கோல மாவை இட்டுச் சிறு குழி போல் அமைக்க வேண்டும். சதுரம் வடிவத்தின் உள்ளே நீள நிறத்தில் கோலத்தை விடவும். சதுரம் வடிவத்தின் வெளியே வளைவு வடிவத்தில் மாவுகோலம் இடவும். அதன்பின் வலையத்தின் உள்ளே மஞ்சள் நிற கோலம் மாவைக் கொண்டு வரையவும். இந்த கோலம் வரைய எளிதாக இருக்கும். மஞ்சள் நிற பூக்களுக்கு நடுவில் இலைகள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் சிறு கோலம் வரைந்தால் கோலம் முழுமையாக இருக்கும்.

வட்ட வடிவ பூக்கோலம்

rangoli 1

இந்த கோலம் பார்க்க பிரமாண்டமாகவும், ஆனால் வரைய எளிதாகவும் இருக்கும். ஒரு பெரிய வட்ட வடிவத்தில் வெள்ளை நிற சாமந்திப் பூக்களை நிறப்ப வேண்டிம். வட்ட வடிவத்தில் முனையில் இடது புரத்தில் பூக்களால் அகல் விளக்கு வரையவும். இதற்கு மஞ்சள் நிற மற்றும் ஊத நிற பூக்களைப் பயன்படுத்தவும், இந்த நிற பூக்கள் வெள்ளை நிறத்துடன் சேர்ந்து வரையும் போது தனித்துவமானதாக இருக்கும். வட்ட வடிவில் இருக்கும் பூக்களில் ஊதா நிற பூக்களைக் கொண்டு “ஹேப்பி தீபாவளி” என்ற ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு நிரப்பலாம். இந்த கோலம் பார்க்க மிக அழகாக இருக்கும்.

சதுரம் பூக்கோலம்

rangoli 2

சதுரம் வடிவத்தில் மஞ்சள் சாமந்திரை அடுக்க வேண்டும். அதன்பிறகு சதுரம் வடிவத்திற்குள் மஞ்சள் நிற உதிரிப் பூக்களை நிரப்ப வேண்டும். சதுரம் வடிவத்தின் மையப்பகுதியில் ஒரு பெரிய முழு சாமந்திப் பூக்களை வைத்து, அதனை சுற்று சிறு ரோஜா பூக்களை வைக்கவும். ரோஜா பூக்களைச் சுற்று வெற்றிலையை வைக்கவும். இப்பொழுது அழகான பூக்கோலம் ரெடி. இந்த கோலத்தை இரண்டி நிமிடத்தில் போடலாம்.

மஞ்சள் நிற பூக்கோலம்

rangoli 3

மஞ்சள் பூக்களால் வட்ட வடிவத்தை வரைந்து, நடுவில் உதிரிப்பூக்களால் நிரப்ப வேண்டும். வட்ட வடிவத்தில் உங்களுக்குப் பிடித்த தெய்வத்தில் வடிவத்தை வரையவும். வட்ட வடிவத்தின் மேல் புறத்தில் பூக்களைக் கொண்டு வளைவுகளை அமைத்து, அந்த வளைவுகளில் சிவப்பு நிற ரோஜா இதழ்களைக் கொண்டு நிரப்பவும்.

தீப கோலம்

rangoli 4

சிவப்பு நிற மாவில் வட்ட வடிவத்தை உருவாக்கவும். எடுத்த வடிவாக இரண்டு அடுக்கு வடிவாக இலைகள் வடிவத்தை அமைக்க வேண்டும். அதன்பிறகு மஞ்சள் நிற உதிரிப் பூக்களை கொண்டு வட்ட வடிவத்தை உருவாக்க வேண்டும், அதன் அடுத்த அடுக்குகளாகச் சிவப்பு நிற ரோஜா இதழ்களைக் கொண்டு வடிவமைக்க வேண்டும். அதன் மேல் முழு வெற்றிலை சுற்று வைத்து விளக்கு தீபத்தை ஏற்றி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik



HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP