நீங்கள் அதிகரிக்கும் உடல் எடையை பற்றி கவலைப்படுகிறீர்களா?
கண்ணாடியில் உங்கள் முகம் வயதான தோற்றத்துடன் காட்சியளிக்கிறதா?
இரவில் தூங்க முடியவில்லையா?
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் சர்க்கரையை நிறுத்த வேண்டிய தருணம் இது. சர்க்கரையை நிறுத்துவதற்கும் இந்த அறிகுறிகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற யோசனை உங்களுக்கு வரலாம். ஆனால் 14 நாட்களுக்கு மட்டும் சர்க்கரை தவிர்த்து பாருங்கள், வித்தியாசத்தை நீங்களே உணர முடியும்.
உங்கள் உணவில் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் நம்ப முடியாத பல உடல் நல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 14 நாட்களுக்கு சர்க்கரையை தவிர்ப்பது, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கிறது என்பதை உணவியல் நிபுணர் சிம்ரன் சைனி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை உடலுக்கு ஆற்றலை வழங்கினாலும் இதில் அதிக கலோரிகள் உள்ளன. 1 கிராம் சர்க்கரையில் 4 கலோரிகள் இருப்பதால், சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது கொழுப்பாக மாறி உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் மூளை சார்ந்த பிரச்சனையுங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
14 நாட்களுக்குள் பிரட், பிஸ்கட், கேக், மிட்டாய், ஐஸ்கிரீம், குக்கீஸ், சோடா, இனிப்பு சேர்த்த காபி மற்றும் இதர பானங்கள் போன்ற அனைத்து சர்க்கரை நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் 14 நாட்களுக்கு வெள்ளை சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் உள்ளிருந்து அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறலாம். உங்கள் சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் மாறும். மேலும் முகத்தில் உள்ள பருக்களும், சுருக்கங்களும் குறைந்துவிடும்.
சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் உடலின் இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கிறது, இதனால் சுறுசுறுப்புடன் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். இது எடை இழப்புக்கும், சிறுநீரக செயல்பாடுக்கும், வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெறுவதற்கும் உதவுகிறது. இதனுடன் மிக முக்கியமாக அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைவதுடன், திடீரென உயரும் இரத்த சர்க்கரையின் அளவையும் தடுக்கலாம்.
14 நாட்களுக்கு தொடர்ந்து சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம், சருமம் பளபளப்பாக மாறுவதையும், சுருக்கங்கள் கணிசமாக குறைவதையும் உங்களால் பார்க்க முடியும். இதனுடன் உடலும் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
ஆராய்ச்சிகளின் படி அதிகப்படியான சர்க்கரை, சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் நார்களுடன் இணைந்து கிளைசேஷன் எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக சருமம் வயது முதிர்ந்த தோற்றத்தை பெறுகிறது. எனவே சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் இளமையான தோற்றத்தை பெறலாம்.
சர்க்கரையை தவிர்ப்பது உங்கள் உடலின் இயற்கையான நச்சுத்தன்மை அமைப்பை சிறப்பாக செயலாற்ற உதவுகிறது. நீங்கள் சர்க்கரை சாப்பிடாத முதல் சில மணிநேரங்களில், உங்கள் கணையம் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்யும். மேலும் உங்கள் கல்லீரல் சேமிக்கப்பட்ட நச்சுகளும் செயல்முறைபடுத்தப்படுகிறது.
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில், உடல் இன்சுலின் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்து அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகலாம். உங்களுக்கு ஏற்கனவே இந்த இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை இருந்தால் மேற்கூறிய செயல்முறைகளை உடல் செயல்படுத்த சற்று தாமதம் ஆகலாம். பெரும்பாலான அறிகுறிகள் முழுமையாக குறைவதற்கு 5 வாரங்கள் வரை கூட தேவைப்படலாம்.
சர்க்கரை நம்மை அடிமைப்படுத்தும் ஒரு உணவு பொருளாகும். சர்க்கரை சாப்பிடும் போது, அதை மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உணர்வு தூண்டப்படுகிறது. இந்நிலையில் சர்க்கரையை தவிர்க்கும் போது, அந்த ஆசையும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதிக கலோரி உடைய சர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம். நீங்கள் சர்க்கரைக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏன் வருகிறது தெரியுமா?
படுக்கைக்கு செல்வதற்கு முன் சர்க்கரை எடுத்துக் கொள்வது மன அழுத்த ஹார்மோன்களின் அளவுகளை அதிகரித்து தூக்கமின்மையை ஏற்படுத்துகின்றன. 14 நாட்களுக்கு சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறலாம். நீங்கள் சர்க்கரையை தவிர்த்து ஓரிரு வாரங்களில் நல்ல மனநிலை மாற்றங்களையும் உணர முடியும்.
சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். ஆரம்பத்தில் 14 நாட்கள் இதைப் பின்பற்றி உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்கள். இதன் நன்மைகளை உணர்ந்த பின் இதுவே உங்கள் வழக்கமாகிவிடும்.
இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சந்திக்கும் பாலியல் ஆரோக்கிய பிரச்சனைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]