PCOS எனப்படும் சினைப்பை நோய்க்குறி பற்றி அறிவீரா? உங்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கான சமிக்ஞையாக இருக்கலாம் என்பதை நீங்கள் உணர்ந்தது உண்டா?
நம்முடைய நாட்டில் பல பெண்கள் இந்த PCOS பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் 5 பெண்களில் ஒருவருக்கு இந்த PCOS பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது. இதனால் பெண்களின் ஹார்மோன் அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
இப்பிரச்சனை உள்ள பெண்களுக்கு இயல்பை காட்டிலும் ஆண் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதன் காரணமாக அவர்களுடைய மாதவிடாயும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இந்த பிரச்சனைக்கான அறிகுறிகள், பெண்கள் பருவம் அடைந்தவுடன் வரும் முதல் மாதவிடாயின்போதே வளர ஆரம்பிக்கிறது. சிலசமயம் இது, அதன்பிறகு அதிகரிக்கும் எடை காரணமாகவும், வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றம் காரணங்களினாலும் நிகழ்கிறது.
FAAD போர்டு அங்கீகரித்த தோல் மருத்துவரான டாக்டர் ஜெயஸ்ரீ சரத் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் இதற்கான காரணங்களையும், சிகிச்சையையும் விளக்கியுள்ளார். அவர் பதிவில் கூறியிருப்பதாவது, ‘PCOS என்பது பொதுவான நாளமில்லா பிரச்சனை ஆகும். இது 8% முதல் 13% பெண்களுக்கு வருகிறது. இதற்கு காரணம், ஆன்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதே ஆகும். இந்த PCOS பிரச்சனைக்கு முக்கியமான காரணம் மரபணுவியல், மேல்மரபியல், உடல் எடை பருமன் அடைதல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவையாகும்.’ என்கிறார்.
இப்போது உங்கள் மனதில் எழும் கேள்வி என்னவென்றால், இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? இந்த பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படி அறிவது? என்பது தான். டாக்டர் ஜெயஸ்ரீ PCOS வருவதற்கான மூன்று முக்கிய காரணிகளை விளக்கியுள்ளார். அதோடு, மற்ற பிற அறிகுறிகள் குறித்தும் கூறியுள்ளார். அவை என்னவென்பதை நாம் இந்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.
உங்களின் சினைப்பை மற்றும் அண்டவிடுப்பை பாதிக்கும் அறிகுறிகள் தான் PCOS எனப்படுகிறது. இதற்கு காரணம் சினைப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றுதல், அதிகரிக்கும் ஆண் ஹார்மோன்கள் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாயும் தான்.
பல சிறிய திரவம் நிரப்பப்பட்ட பைகளினால் PCOS உருவாகிறது. இந்த பைகள் பொதுவாக விரைப் பைகள் தான். இதனில் முதிர்ச்சி அடையாத முட்டைகள் இருக்கும். இந்த முட்டைகள் ஒருபோதும் முதிர்ச்சியடைவதில்லை. அண்டவிடுப்பை தூண்டும் அளவுக்கு முதிர்ச்சி அடையாது.
அண்டவிடுப்பு குறைபாடு காரணமாக எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டரோன், FSH, LH போன்ற ஹார்மோன்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது. புரோஜெஸ்டரோன் அளவு குறைவாக இருக்க, ஆன்ட்ரோஜன் அளவு அதிகமாகிறது. இதனால் மாதவிடாயை பாதிக்கிறது. இதன் காரணமாகவே, PCOS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் குறைவாக வருகிறது.
PCOS உள்ள பெண்களின் உடலில் பலவித மாற்றங்கள் நிகழ தொடங்குகின்றன. உங்களுடைய உடல் இந்த நோய்க்கான சிக்னலை சில வழிகளில் கொடுக்கத்தான் செய்கிறது. இந்த 3 மாற்றங்கள் உங்கள் உடலில் பெருமளவில் காணப்பட்டால், உங்களுக்கு PCOS பிரச்சனை இருக்க பெரிதும் வாய்ப்புள்ளது.
PCOS காரணமாக பரு வருகிறது. ஏனெனில், ஆன்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன்கள் அதிகளவில் சினைப்பையில் உற்பத்தி ஆகிறது. இது சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பை உண்டாக்குகிறது. PCOS பிரச்சனை உள்ள சிலருக்கு முகம், கழுத்து, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பருக்கள் இருப்பதை காண முடியும்.
PCOS பிரச்சனையால் முடி கொட்டுமா என்ற கேள்விக்கு பதில் ‘ஆம்’ என்றே கூற வேண்டும். முடி கொட்டுதல் PCOS பிரச்சனைக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். இதற்கு காரணம், ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதாலே ஆகும். இதனாலேயே, பரு வருதல், முடி வலுவிழந்து காணப்படுதல், முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் வருகிறது. மேலும், முடி உடையவும் இது காரணமாகிறது.
இதனை அளவுக்கு மீறிய மயிர் வளர்ச்சி என்பர். PCOS உள்ள பெண்களுக்கு உடலில் முடி அதிகம் வளர்தலும், முகத்தில் முடி வளர்தலும் ஒரு பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. இதனால், முகம், மார்பு, வயிறு, முதுகு, கை மேல்பகுதி அல்லது கால் மேல்பகுதியில் அடர்த்தியான கருமை நிற முடி காணப்படும். இதற்கும் ஆன்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் தான் காரணமாக உள்ளது.
இவற்றை தவிர, உடலில் ஏற்படும் பிற மாற்றங்களாக, ஒழுங்கற்ற மாதவிடாய், திடீரென எடை அதிகரித்தல், முடி மெலிந்து காணப்படுதல், முடி உதிர்தல் போன்றவையும் அடங்கும்.
பல காரணிகளை பொறுத்தே சிகிச்சை என்பது அமைகிறது. அதோடு, உங்களின் வயது, உங்களுக்கு காணப்படும் அறிகுறிகள், உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்தும் இதற்கான சிகிச்சை அமையும்.
எடையை குறைக்க தொடங்குதல், உணவு முறை பழக்கம், உடற்பயிற்சி போன்றவை இதற்கான சிகிச்சைகளாக காணப்படுகின்றன. நீங்கள் 5% முதல் 10% எடையை குறைத்தால் கூட, அது மாதவிடாய் சீரான இடைவெளியில் வர உங்களுக்கு உதவி செய்யும். மேலும் டாக்டர் ஜெயஸ்ரீ, இன்னும் பல சிகிச்சை வழிமுறைகளையும் பகிர்ந்துக்கொள்கிறார்.
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு பல காரணங்கள் உள்ளது. அதேபோல, முடி உதிர்வுக்கும், எடை அதிகரிப்புக்கும் பல காரணங்கள் உள்ளது. ஒருவேளை இப்பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் அப்போது நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
உங்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிவதுபோல தோன்றினாலும், பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரை அணுகவும். உங்களுடைய உணவு முறையில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கு முதலில் ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]