
முட்டையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. முட்டைகளை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல அற்புத நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் முட்டையை அதிக அளவுகளில் தொடர்ந்து சாப்பிடுவது பின்வரும் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முட்டையை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது எடை அதிகரிப்பு முதல் சர்க்கரை நோய் வரை பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான ரித்துபுரி அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீரக கல் வராமல் தடுக்க, இந்த 4 குறிப்புகளை பின்பற்றினால் போதும்!

முட்டையில் கொலஸ்ட்ரால் சத்துக்களும் உள்ளன. ஒரு முட்டையில் சுமார் 180 மில்லி கிராம் அளவிற்கு கொலஸ்ட்ரால் உள்ளது. இந்நிலையில் ஒரு நாளைக்கு 1-2 முட்டை வரை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதற்கு மேல் அதிகமாக சாப்பிட்டால், உடலின் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கலாம். அதிகரிக்கும் கொலஸ்ட்ராலால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
முட்டைகளை அதிகமாக சாப்பிடுவது அஜீரணத்தை ஏற்படுத்தும். ஏனெனில் முட்டையில் நிறைந்துள்ள புரதத்தை உடல் ஜீரணிக்க கூடுதல் நேரம் தேவைப்படும். முட்டைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது அது செரிமான ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். குறிப்பாக ஒரே வேளையில் நிறைய முட்டைகள் சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். உதாரணமாக காலையிலேயே 2 முட்டை சாப்பிடுவதற்கு பதிலாக, காலையில் ஒரு முட்டையும் மதிய வேளையில் ஒரு முட்டையும் சாப்பிடலாம்.
இவ்வாறு பிரித்து சாப்பிட்டால் முட்டையால் ஏற்படும் அஜீரண தொந்தரவுகளை தடுக்கலாம்.
பலரும் உடல் எடையை குறைப்பதற்கு முட்டையை பயன்படுத்துகிறார்கள். முட்டை எடை இழப்புக்கு உதவும். இருப்பினும் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களுடைய இலக்கை அடைய முடியாமல் போகலாம். முட்டையில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்க கூடும்.

முட்டைகளை அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரையின் அளவுகளை அதிகரிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதில் நிறைந்துள்ள கொழுப்புகள் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கின்றன. இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைய, சரும பொலிவு பெற ஒரே ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]