herzindagi
murungai keerai benefits

முருங்கைக் கீரை நன்மைகள் : கண் கூடாக அதிசயங்கள் நிகழ்வதை பார்க்கலாம்

முருங்கை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருக்கின்றன. முருங்கை கீரை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வையை மேம்படுத்துவது வரை ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
Editorial
Updated:- 2025-04-25, 23:46 IST

முருங்கைக் கீரையை ஊட்டச்சத்துகளின் தொகுப்பு என்றே சொல்லலாம். முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கூடிய முருங்கை கீரை, முருங்கைக்காய் மிக மிக சத்தானது. முருங்கைக் கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஒரு கட்டு முருங்கைக் கீரையில் உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஆற்றலும் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் முருங்கைக் கீரையை பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காகவும் காய்ச்சல், செரிமானம் தொடர்புடைய பிரச்னைகளுக்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். கீரையில் பொதுவாக இரும்புச்சத்து உள்ளதென நமக்கு தெரியும். இதை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது எப்படி என பார்ப்போம். மனித குலத்திற்கு கிடைத்த சூப்பர் ஃபுட் ஆக முருங்கைக் கீரையை கருதலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முருங்கைக் கீரை மிக மிக நல்லது.

murungai keerai

உணவில் முருங்கைக் கீரையின் அவசியம்

ஊட்டச்சத்து நிபுணர்களின் தகவல்படி முருங்கைக் கீரையில் வைட்டமின்கள் ஏ,சி மற்றும் ஈ உள்ளன. இவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாட்டிற்கும், தோல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன. இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து குறைபாடு உள்ள எந்த நபரும் உணவுமுறையில் முருங்கைக் கீரை சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

முருங்கைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள்

  • முருங்கைக் கீரையில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம் அதிகரிக்கும். நம் உடல் தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கான சக்தி முருங்கைக் கீரையில் கிடைக்கிறது.
  • முருங்கைக் கீரையில் கலோரிகள் குறைவு. அதே நேரம் ஏராளமான நார்ச்சத்தும் உண்டு. முருங்கைக் கீரை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரத்திற்கு பசிக்காது. எளிதில் ஜீரணம் ஆகும் என்பதால் எடை இழப்புக்கு உதவும்.
  • மருத்துவ ஆய்வுகளின்படி முருங்கைக் கீரை உடலில் இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாகும்.
  • கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாட்டால் ஒருவருக்கு எலும்பு புரை நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு தீர்வு காண முருங்கைக் கீரை சாப்பிட்டால் போதுமானது.
  • முருங்கைக் கீரையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஈ நம்முடைய சருமத்தை பளபளப்பாகவும் கூந்தலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
  • முருங்கைக் கீரை நம் உடலில் இருந்து நச்சுகளை எளிதில் வெளியேற்ற கூடியது. குடலில் புழுக்களை வெளியேற்றி மலச்சிக்கலையும் போக்கும்.

மேலும் படிங்க  வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்

உணவு முறையில் முருங்கைக் கீரை

  • முருங்கைக் கீரையின் நன்மைகளை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் வீட்டில் உள்ள குழந்தைகள், ஒரு சில பெரியவர்களும் அதை தவிர்க்கின்றனர். எனவே முருங்கைக் கீரையை நேரடியாக வேகவைத்து கொடுக்காமல்
  • மிக்ஸியில் அடித்து பருப்பு குழம்பில் சேர்த்துக் கொடுக்கலாம்.
  • கீரையை நன்கு வேக விட்டு வடிகட்டி சில காய்கறிகள் போட்டு சூப் ஆக குடிக்கலாம்.
  • முருங்கைக் கீரையை வைத்து டீ கூட போட்டு குடிக்கலாம்.
  • முருங்கைக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.
  • முருங்கைக் கீரை நம் உடலின் அதிசயங்கள் நிகழ்த்தக் கூடியவை. வாரத்திற்கு இரண்டு முறை முருங்கைக் கீரை சாப்பிட்டு பாருங்கள். உடல் ஆரோக்கியம் மேம்படுவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]