herzindagi
bamboo rice uses

மூங்கில் அரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

மூங்கில் அரிசி மற்ற அரிசிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.  பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்த இந்த அரிசியை சாப்பிடுவதால் நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும்...
Editorial
Updated:- 2023-04-03, 06:01 IST

ஆராய்ச்சியின் அடிப்படையில், மற்ற அரிசிகளை விட இதில் அதிக புரதச்சத்து உள்ளது என்று கண்டுபிடிக்க பட்டுள்ளது. மூங்கில் அரிசியில் பல ஆரோக்கியம் நிறைந்த நன்மைகள் உள்ளன, அவை என்னென்ன என்பதை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சத்துக்கள் நிறைந்தது

மூங்கில் அரிசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நிகோடினிக் அமிலம், வைட்டமின் B1, கரோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தவிர, இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், லினோலிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் நிறைந்துள்ளது, இதனால் பல மோசமான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டது.

இதுவும் உதவலாம் : இரவு தூங்குவதற்கு முன் ஒரு கைப்பிடி அளவு பிஸ்தா சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகளா!

நீரிழிவு நோயை தடுக்கிறது

மூங்கில் அரிசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் லினோலிக் அமில பண்புகள் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் உடலில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக பிசிஓஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பெண்கள் மூங்கில் அரிசியை உட்கொள்ளலாம். இது பெண்களில் மாதவிடாய் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

bamboo rice medicinal uses

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

மூங்கில் அரிசியில் நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால்களின் பண்புகள் உள்ளன, அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. உண்மையில், பைட்டோஸ்டெரால்கள் அவற்றின் உறிஞ்சும் தன்மையை தடுப்பதன் மூலம் கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்கின்றன. இது தவிர மூங்கில் சாதம் சாப்பிட்டால் வயிறு நிறைந்து அதிக உணவு உட்கொள்ள பிடிக்காது. இதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

இரத்த அழுத்தம் பிரச்சனைகள் என்பது உயர் இரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றின் காரணமாக உருவாகின்றன. இருப்பினும், மூங்கில் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால், அது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதலாம். இது தவிர ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளையும் கொண்டுள்ளது, இதன் காரணமாக மூங்கில் அரிசி நாளமில்லா கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது தமனிகளின் அடர்த்தியை குறைப்பதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

மனநிலையை ஊக்குவிக்கிறது

மூங்கில் அரிசி நரம்பு மண்டல கோளாறுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மூங்கில் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பழுப்பு அரிசி மனநிலையை ஒழுங்குபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது செரோடோனின் மற்றும் டோபமைன்களை வெளியேற்ற உதவுகிறது. இவையே மனநிலையை சீராக வைத்து மன செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

பற்களை பலமாக வைக்கிறது

மூங்கில் அரிசியை உட்கொள்வது பற்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நன்மை பயக்கும். இத்தகைய சூழ்நிலையில், மூங்கில் அரிசியில் வைட்டமின் B6 அதிக அளவில் காணப்படுகிறது. இந்த அத்தியாவசிய வைட்டமின் பாக்டீரியாவால் ஏற்படும் துவாரங்கள் அல்லது சிதைவிலிருந்து பற்களைப் பாதுகாக்க உதவும். அதே நேரத்தில், பற்களை பலமாக வைத்திருக்க வைட்டமின் B6 அவசியம் தேவைப்படும் ஒரு சத்து ஆகும்.

இதுவும் உதவலாம் :தினமும் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

bamboo rice

இருமலுக்கு சிறந்த நிவாரணி

மூங்கில் அரிசியில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. சுவாச பிரச்சனைகளை சமாளிக்க இது மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. உங்களுக்கு இருமல் அல்லது சளி பிரச்சனை இருந்தால், நீங்கள் மூங்கில் அரிசியை உட்கொள்வது நன்மை பயக்கும். பாஸ்பரஸ் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது மற்றும் நாள்பட்ட ஆஸ்துமாவின் அறிகுறிகளைப் போக்க உதவும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]