herzindagi
kiwi benefits for stomach problems

Stomach Problems : வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பழம், எது தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செரிமானம் சீராக நடைபெற வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு காண சத்துக்கள் நிறைந்த இந்த அற்புதமான பழத்தை உண்டு பயன் பெறுங்கள்…
Editorial
Updated:- 2023-09-23, 17:00 IST

ஆரோக்கியமாக வாழ காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலை வலுப்படுத்தவும் நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இன்றைய வாழ்க்கை சூழலில் பலரும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். ஆரோக்கியமான உணவு வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையை பெருமளவு குறைக்க முடியும். அந்த வகையில் வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பல வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு பழத்தை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான விதி சாவ்லா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்:  நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உகந்த கிவி பழங்கள்

kiwi benefits for healthy stomach

செரிமானம் சார்ந்த பல பிரச்சனைகளை எதிர்த்துப் போராட கிவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிபுணர்களின் கருத்துப்படி இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானம் சார்ந்த பல பிரச்சனைகளை நீக்கவும் உதவுகின்றன. கிவியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரும். இதன் மூலம் குடல் இயக்கம் எளிதாகி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

யாரெல்லாம் கிவி சாப்பிட வேண்டும்?

மலக்குடல் எரிச்சல் நோயால் (IBS) அவதிப்படுபவர்கள் கிவி பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இந்நோய் ஒரு வகையான இரைப்பை குடல் பிரச்சனையாகும். இதன் காரணமாக வயிற்று வலி, உப்புசம், மலச்சிக்கல் இது போன்ற அறிகுறிகளை உணரலாம். கிவியில் உள்ள நார்ச்சத்து மற்றும் என்சைம்கள் குடல் இயக்கத்தை எளிதாக்குகின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் அலர்ஜியை தடுக்கவும் உதவுகின்றன.

கிவியில் நிறைந்துள்ள வைட்டமின் C செரிமான மண்டலத்தின் சீரான செயல்முறைக்கு உதவுகிறது. மோசமான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் கிவி சிறந்த பலன்களை கொடுக்கும். இது வயிற்றின் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி ஆசிட் ரிஃப்ளக்ஸின் அறிகுறிகளை குறைக்கிறது.

kiwi stomach benefits

கிவி சாப்பிடும் முறை 

கிவியின் தோலை நீக்கிவிட்டு அதன் சதை பகுதியை சாப்பிடலாம். இதை சாலட், ஸ்மூத்தி அல்லது தயிருடனும் சேர்த்து எடுத்து கொள்ளலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தடுக்கவும் கிரியை உங்கள் அன்றாட உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 விஷயங்களை செய்தால் போதும், ஒரே வாரத்தில் ஒல்லியாகலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]