herzindagi
actress anushka laughing

laughing disorder : நடிகை அனுஷ்காவை தாக்கிய சிரிப்பு நோய்

நடிகை அனுஷ்கா ஷெட்டி அரிய வகை நோயால் அவதிப்படுவது தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. பேட்டி ஒன்றில் அனுஷ்காவே இதைப்பற்றி பேசியுள்ளார். 
Editorial
Updated:- 2023-02-16, 14:06 IST

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரெண்டு என்ற படம் மூலம் அறிமுகமானவர், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிம்பு என டாப் ஸ்டார்களுடன் நடித்து கோலிவுட் கனவு கன்னியாக வலம் வந்தார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்தார். பாகுபலி திரைப்படம் அனுஷ்காவுக்கு விருதுகளை வாங்கி தந்தது. அதுமட்டுமில்லை இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவுக்கும் பிரபாஸூக்கும் காதல் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த கிசுகிசுவுக்கு தற்போது வரை முடிவு தெரியவில்லை. பிரபாஸூம் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே போல் அனுஷ்காவுக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை இப்படி இருக்கையில், தற்போது அனுஷகா ரசிகர்களுக்கு, அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்கா மனம் திறந்து பல விஷயங்களை ஷேர் செய்தார். அந்த பேட்டில் தனக்கு அரிய வகை நோய் இருப்பதை அனுஷ்கா பதிவு செய்துள்ளார். அதாவது, அனுஷ்கா சிரிப்பு வியாதி எனச் சொல்லப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்:பேலியோ டயட்டால் உயிரிழந்த பிரபல நடிகரின் மனைவி; ஆபத்தானதா பேலியோ டயட்?

actress anushka tamil news

”சிரிப்பெல்லாம் ஒரு வியாதியா? என பலரும் நினைக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் பிரச்சனையே. 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து சிரிப்பேன். என்னால் சிரிப்பை நிறுத்தவே முடியாது. காமெடி திரைப்படங்கள் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பேன். 15 - 20 நிமிடங்கள் கழித்து தான் என் சிரிப்பு நிற்கும். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இதனால் பலமுறை சிரமப்பட்டிருக்கிறேன். சிரிப்பை நிறுத்த நேரம் எடுக்கும் என்பதால் 20 நிமிடங்களுக்கு ஷூட்டிங்கை நிறுத்தி வைப்பார்கள்” என கூறியுள்ளார்.

அனுஷ்கா இப்படி அரியவகை நோயால் அவதிப்பட்டு வருவது அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் தங்களது உடல் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர். சமந்தா, ஸ்ருதிஹாசன், பூனம் கவுர் வரிசையில் தற்போது அனுஷ்காவும் தனது உடல்நலப் பிரச்சனை பற்றி மனம் திறந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நடிகை சமந்தாவுக்கு வந்திருக்கும் நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]