
சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிக்க தவறினால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையலாம். இதனால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பிற நோய்களின் தாக்குதல்களும் அதிகரிக்கலாம். இந்நிலையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். ஒரு சில நல்ல மாற்றங்களை செய்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களை தவிர்த்திட முடியும்.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த 5 வாழ்க்கை முறை மாற்றங்களை நீங்கள் கடைபிடிக்கலாம். இது குறித்த தகவல்களை, சான்றளிக்கப்பட்ட நீரழிவு கல்வியாளரும் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணருமான ரித்திமா பத்ரா அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: தாயான பிறகு ஒவ்வொரு பெண்ணும் சாப்பிட வேண்டிய 3 உணவுகள் !
தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அதில் இருக்கக்கூடிய முழு நன்மைகளையும் பெற அதை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்நிலையில் உடல் லைக்கோபீனை நன்றாக உறிஞ்சுவதற்கு தக்காளியை சமைக்கும் பொழுது சில துளி ஆலிவ் எண்ணெயை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் லைக்கோபினின் உறிஞ்சுதலுக்கு உதவுகின்றன.
சாப்பிடும் பொழுது டிவி, ஃபோன் லேப்டாப் அல்லது எந்த கேமிங் கருவியையும் பயன்படுத்த வேண்டாம். சாப்பிடும் பொழுது இதுபோன்ற கவனிச்சிதறல்கள் இருந்தால் உணவை சரியாக சாப்பிட முடியாது. மேலும் இதனால் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதுபோன்ற கவனச் சிதறல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவை பொறுமையாக மென்று சாப்பிடுவதில் கவனம் செலுத்தலாம்.

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.
இரவு உணவை மிதமாக எடுத்துக் கொள்ளவும். இரவில் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் வளர்ச்சிதை மாற்றமும் மெதுவாக இருக்கும். மேலும் இரவு உணவிற்கும் தூங்குவதற்கும் இடையே 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இரும்பு சத்து மிகவும் அத்தியாவசியமானது. உங்கள் அன்றாட உணவில் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் வைட்டமின் C நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் C நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலில் இரும்புச் சத்து உறிஞ்சுதல் மேம்படும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 2 வாரங்களில் 10 கிலோ எடையை குறைக்க நிபுணர் பரிந்துரை செய்யும் டயட் பிளான்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]