
மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைக்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும், வீட்டிலேயே காய்கறிகள், பழங்கள் என விளைவித்து சாப்பிடுவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி, வீட்டில் எளிதாக வளர்க்கக் கூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யா. ஊட்டச்சத்து நிறைந்த கொய்யா பழத்தை குறைந்த இடவசதியிலும் கூட வளர்க்கலாம்.
மேலும் படிக்க: வீட்டுத் தோட்டத்தில் குங்குமப்பூ வளர்ப்பு: சிறிய இடம் இருந்தால் போதும்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
சரியான மண், சரியான கவனிப்பு, போதுமான சூரிய ஒளி இருந்தால் போதும், சிறிய இடத்திலும் கொய்யா செடிகள் சிறப்பாக வளரும். வீட்டில் கொய்யா செடி வளர்ப்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
கொய்யா செடிகளை நடுவதற்கு ஏற்ற காலம் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகும். இந்த நேரத்தில் நிலவும் சாதகமான தட்பவெப்பநிலை, வேர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். கொய்யா செடியை ஒரு சாதாரண பானை அல்லது பக்கெட்டிலும் நடவு செய்யலாம்.

செடி நடுவதற்கு முன்பு, பானையை நன்றாக சுத்தம் செய்து, அதில் களிமண்ணை நிரப்ப வேண்டும். வீட்டில் மண் கலவை தயாரிப்பவர்கள், அதனுடன் கோகோ பீட், வேப்ப மர பட்டை மற்றும் இயற்கை உரங்களை சேர்த்து மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம்.
கொய்யா செடிகளை விதைகள் அல்லது வெட்டப்பட்ட தண்டுகள் மூலமாக நடவு செய்யலாம். ஆனால், வெட்டப்பட்ட தண்டுகளை பயன்படுத்துவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அவை ஐந்து முதல் ஏழு நாட்களில் வேர் பிடித்து, விரைவில் காய்க்க தொடங்கும். விதைகளை நேரடியாக பானைகளில் விதைத்து வெயிலில் வைக்கலாம்.
மேலும் படிக்க: மல்லிகை செடி பராமரிப்பு: அதிக பூக்கள் பூக்க வைக்க இந்த எலுமிச்சை உரம் போதும்!
கொய்யா செடிக்கு ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி இரண்டும் மிக அவசியம். எனவே, தினமும் குறைந்தது ஆறு முதல் ஏழு மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் செடியை வைக்க வேண்டும். இளம் செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். செடி முதிர்ந்த பிறகு, தண்ணீர் அளவை படிப்படியாக குறைக்கலாம்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மாட்டு சாணம் மற்றும் முட்டை ஓடுகள் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். கொய்யா செடிகள் வண்டல் மண் உள்ள இடங்களில் நன்றாக வளரும். ஏனெனில், அத்தகைய மண்ணுக்கு குறைவான தண்ணீரே போதுமானது.
கொய்யா செடிகள் பண்ணை அல்லது வீட்டு தோட்டம் என எங்கு வளர்க்கப்பட்டாலும், வெவ்வேறு மண் மற்றும் தட்பவெப்பநிலைகளுக்கு ஏற்ப வளரும் தன்மை கொண்டது. சரியான கவனிப்புடன், சிறிய பானையில் வளர்க்கப்படும் கொய்யா செடியும் நல்ல அறுவடை கொடுக்கும். வீட்டிலேயே வளர்க்கக் கூடிய பழங்களில் கொய்யா மிகவும் எளிமையானது மற்றும் பலனளிக்கக் கூடியது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]