herzindagi
yoga image big

Lungs Strengthen Yoga: நுரையீரலை வலுவடைய செய்யும் 4 சூப்பரான யோகாசனம்

தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நுரையீரல் பலவீனமடைந்திருந்தால். ஒதோ நுரையீரலை வலுப்படுத்தும் சில யோகாசனங்கள்
Editorial
Updated:- 2024-06-21, 20:38 IST

யோகா உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நுரையீரலை வலுப்படுத்தும் சில யோகாசனங்களைப் பற்றி பார்க்கலாம். நுரையீரல் உடலின் மிக முக்கியமான உறுப்பு. அவை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகின்றன. எனவே அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம். ஆனால் தவறான உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை ஆகியவை நுரையீரலில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக நுரையீரல் முன்கூட்டியே பலவீனமடையத் தொடங்குகிறது மற்றும் சுவாச நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன. தினமும் சிறிது நேரம் யோகா செய்வதே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க சிறந்த வழியாகும். இந்த யோகாசனங்களைப் பற்றி அக்ஷர் யோகா மையத்தின் யோகா மற்றும் ஆன்மீக குரு ஹிமாலயன் சித்தா அக்ஷர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெற தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்

புஜங்காசனம், சேதுபந்தாசனம் போன்ற யோகாசனங்கள் மார்பைத் திறந்து, நுரையீரலை விரிவுபடுத்தி, காற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன. இது தவிர பிராணாயாமம், கபாலபதி போன்ற யோகா ஆசனங்கள் சுவாசத்தை உள்ளிழுப்பதையும் வெளியேற்றுவதையும் வலியுறுத்துகின்றன. இது நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது. தொடர்ந்து இந்த யோகா ஆசனங்களைச் செய்வது சுவாச மண்டலத்தின் தசைகளை பலப்படுத்துகிறது. இதனால் சுவாசத்திற்கு அதிக முயற்சி தேவையில்லை.

புஜங்காசனம்

bhujan inside

  • யோகாசனம் செய்யும் விாிப்பை விாித்து குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும்.
  • இரு கைகளையும் மார்புக்கு நேராக தரையில் உள்ளங்கைகளை இருக்கும் மாறு ஊன்றி வைக்கவும்.
  • மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டே கைகளை நன்கு ஊன்றியவாறு சற்று  மார்பு பகுதிளைத்து உயர்த்தவும்.
  • உங்கள் வயிறு பகுதி தரையில் இருக்க வேண்டும்.
  • உங்கள் தலை மற்றும் கழுத்தை உயர்த்தி கூர்மையாக நோக்கிப் பார்க்க வேண்டும்.
  • சில நொடிகள் இந்த நிலையில் இருந்து மெதுவாக ஓய்வெடுக்கவும்.

உஸ்த்ராசனம்

USTRASANA inside

  • இதைச் செய்ய வஜ்ராசன முறையில் அமர வேண்டும்.
  • உங்கள் முழங்கால்களை வளைத்து இடுப்பு வலையாமல் நேராக உட்கார வேண்டும்.
  • மூச்சை உள்ளிழுத்தபடி பின்னோக்கி குனிந்து வலது கையால் வலது குதிகாலைப் பிடிக்கவும்.
  • அதன்பின் இடது கையால் இடது குதிகால் பிடிக்கவும்.
  • இந்த நேரத்தில் கழுத்தை பின் நோக்கி வலைக்கவும்
  • இந்த நிலையில் சிறிது நேரம் இருங்கள்.
  • பின்னர் உங்கள் குதிகால்களில் இருந்து உங்கள் கைகளை அகற்றி ஓய்வெடுக்கவும்.

பாலம் போஸ் (சேது பந்தசனா)

Setu Bandhasana  inside

  • உங்கள் முழங்கால்களை வளைத்து கால்களை தரையில் வைத்து முதுகில் படுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் கால்களை இடுப்பு அகலத்தில் வைக்கவும்.
  • மெதுவாக உங்கள் கால்களை உங்கள் இடுப்புக்கு அருகில் கொண்டு வர முயற்சிக்கவும்.
  • மூச்சை உள்ளிழுத்து உங்கள் கால்கள் மற்றும் கைகளில் அழுத்தம் கொத்து இடுப்பை மேல்நோக்கி உயர்த்தவும்.
  • தோள்களும் தலையும் தரையில் இருக்க வேண்டும்.
  • உங்களால் முடிந்தவரை இடுப்பை தரையில் இருந்து உயர்த்த முயற்சிக்கவும்.
  • மேலே செல்லும் போது மூச்சை உள்ளிழுக்கவும் கீழே வரும்போது மூச்சை வெளியேற்றவும்.
  • இந்த நிலையில் சிறிது நேரம் இருங்கள்.
  • பின்னர் பழைய நிலைக்கு திரும்பவும்.

மேல்நோக்கி எதிர்கொள்ளும் நாய் (உர்த்வா முக ஸ்வனாசனா )

Upward Facing Dog  inside

  • குப்புறப் படுத்து கைகளை உங்கள் உடலுக்கு அருகில் வைக்கவும்.
  • கீழே குனிந்து முழங்கைகளை உடலுக்கு அருகில் வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு மூச்சை உள்ளிழுத்து கைகளை நேராக்குங்கள்.
  • இப்போது பாயில் இருந்து உங்கள் தொடைகளை உயர்த்தி மார்பை உயர்த்தவும்.
  • உங்கள் தலையை பின்னால் நகர்த்தி மேலே பார்க்கவும்.
  • 30 முதல் 60 வினாடிகள் வரை நீங்கள் ஆசனத்தில் இருக்க 5 முறை மூச்சை உள்ளிழுக்கவும்.
  • படிப்படியாக உடலில் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் போது நீங்கள் நேரத்தை அதிகரிக்கலாம்.
  • 90 வினாடிகளுக்கு மேல் செய்ய வேண்டாம். அது முடியாவிட்டால், உங்களால் முடிந்தவரை செய்யுங்கள்.

மேலும் படிக்க: உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஜாதிக்காய் எண்ணெய்

ஆரம்பத்தில் இதைச் செய்வதில் சிரமம் இருக்கலாம் ஆனால் கைகள் மற்றும் தோள்களின் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம், யோகாசனத்தை எளிதாக செய்யலாம்.

இந்த யோகாசனங்களை தினமும் செய்து வந்தால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]