Bridal Makeup Ideas: திருமண பெண்களுக்கான சிறந்த 5 பிரைடல் மேக்கப் லுக்

உங்கள் திருமணத்திற்கு எந்தவித மேக்கப் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், கவலை இல்லை! இந்த கட்டுரை உங்களுக்கு சிறந்த மேக்கப்பை தேர்வு செய்ய உதவியாக இருக்கும்.
image

இந்தியாவில் திருமண நிகழ்வு என்றாலே பிரமாண்டமாகக் கருதப்படுகிறது. திருமண பெண்ணின் தலைமுதல் கால் வரை அணிந்திருக்கும் ஆடைகள் அணிகலன்கள் பார்க்கவே தனி கூட்டம் உண்டு. அதே வேலையில், இந்த பெரிய நிகழ்வில் அனைவரும் கண்களும் முதலில் மணப்பெண்கள் முகத்தில் கவனம் செலுத்தும். திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மணப்பெண்களின் அழகைப் பார்த்து வியக்க வைக்கும் சிறந்த மேக்கப் வகைகளைப் பார்க்கலாம். இந்திய பிரைடல் மேக்கப் நிறைய மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் அதிக பேக்கப் தெரியாமல் தோற்றம் சிறப்பாக வெளிப்படுத்தவே மணப்பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.

இயற்கையான குறைந்தபட்ச ஒப்பனை தோற்றம்

சமீப காலமாக இந்த குறைந்தபட்ச திருமண மேக்கப் தோற்றம் பிரபலமாக இருக்கிறது. சரும நிறத்திற்கு ஏற்ற சமமான மேக்கப்பை பயன்படுத்தி இந்த ஒப்பனை செய்யக்கூடியது. முக அம்சங்களை முன்னிலைப்படுத்த நுட்பமான வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒப்பனை வகை மணப்பெண்களுக்குச் சரியான தோற்றத்தை அளிக்கிறது மற்றும் இயற்கையான கதிரியக்க பிரகாசத்தை அளிக்கிறது. பிரபலங்களின் திருமண நிகழ்வுகளுக்கு அதிகமாக இந்த மேக்கப் பயன்படுத்தப்படுகிறது.

278898158_712063919922059_8157657948962494199_n

Image Credit:pinterest


மெட்டாலிக் டோன்ஸ் பிரைடல் மேக்கப்

இந்திய திருமண நிகழ்வுகளில் பிரபலமாக இருந்து வரும் உலோக திருமண மேக்கப். மெட்டாலிக் மேக்கப் என்பது வண்ணத் தட்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தை உள்ளடக்கியது. இந்த மூன்று வண்ணங்களும் சாயல்களில் முகம் தோற்றமளிக்கும். இந்த மேக்கப் அதிகப்படியான பளபளப்பு மற்றும் கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. பாரம்பரிய திருமணங்கள் மற்றும் உடைகளுக்கு மெட்டாலிக் ஐ ஷேடோ பயன்படுத்தப்படுகிறது. உங்கள் முகத்தின் எலும்புகளைச் சரியாக வரையறுக்க, இந்த தோற்றத்தை ஹைலைட்டர் மற்றும் ப்ளஷ் மூலம் பொருத்தப்படுகிறது. மெட்டாலிக் டோன்ஸ் பிரைடல் மேக்கப் திருமணத்திற்குச் சரியான தேர்வாக இருக்கிறது.

metallic bridal makeupImage Credit:pinterest


மேலும் படிக்க: மணப்பெண்களுக்கான சிறந்த 5 வகையாக பிரைடல் கவுன் டிசைன்கள்

நேர்த்தியான இந்திய மணப்பெண்களுக்கான ஒப்பனை

ஸ்மோக்கி அல்லது மினுமினுப்பான கண்கள், பளிச்சென்ற உதடு, உடைக்கு ஏற்ற போட்டு மற்றும் முடி அலங்காரம். அதனுடன் கனமான நகைகள் மற்றும் லெஹங்கா அல்லது புடவைகளுடன் இந்த தோற்றத்தைப் பொருத்தலாம். இதுபோன்ற அலங்காரத்துடன் மிகவும் கவர்ச்சியான மணமகளாக இருப்பார்கள். கன்னத்திலும் எலும்புகளில் கவனம் செலுத்த விரும்பினால் மெட்டாலிக் பயன்படுத்தலாம். முகத்தை ப்ளஷ் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கலாம். இப்படி செய்தால் உங்கள் கன்னத்து எலும்புகளை உயர்த்தி ராணி போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

elegant Indian brides makeup

Image Credit:pinterest

ஸ்மோக்கி ஐ பிரைடல் மேக்கப்

பிரைடல் மேக்கப் ஸ்மோக்கி ஐ என்பது ஒரு அழகான கண்களை மணப்பெண்கள் வெளிப்படுத்தும் ஸ்டைலாகும், இது கருப்பு ஐ ஷேடோ மற்றும் ஐலைனர் மூலம் கண்களைக் கவர்ச்சியான மற்றும் வியக்கத்தக்கத் தோற்றத்தை அளிக்கிறது. திருமண நாளில் சக்திவாய்ந்த தோற்றத்தை ஏற்படுத்த விரும்பும் மணப்பெண்களுக்கு இந்த ஒப்பனை மிகவும் பொருத்தமானது. ஸ்மோக்கி ஐ மேக்கப் கண்களைப் பிரகாசமாக்குகிறது, திருமண புகைப்படங்களில் பார்க்கக் கவர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

Smokey eye bridal makeup

Image Credit:pinterest

மேட் ஒப்பனை தோற்றம்

மேட் ஒப்பனை தோற்றம் மிகவும் பிரபலமானது. மணப்பெண்களுக்கு இந்த வகை ஒப்பனையில் இருண்ட சாயல்களை அல்லது நேர்த்தியான இயற்கை தோற்றத்தை உருவாக்கலாம். இந்த வகை மணப்பெண் ஒப்பனை அனைத்து பருவ நிலைக்கும் ஏற்றது. மணமகளுக்கான மேட் மேக்அப் தோற்றம் மணப்பெண் தோற்றத்திற்கான சிறந்த ஒப்பனைகளில் ஒன்றாகும். இந்த வகை ஒப்பனை சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை திறம்பட உறிஞ்சுகிறது. இது கறைகளை மறைத்து, மென்மையான மற்றும் வெல்வெட் அழகை அளிக்கிறது.

Matte makeup look

Image Credit:pinterest

மேலும் படிக்க: திருமணத்தன்று பளபளப்பாக இருக்க மணப்பெண்கள் ஃபாலோ பண்ண வேண்டிய அழகுக்குறிப்புகள்

இந்திய மணப்பெண்கள் பாரம்பரிய, நடுநிலை, கவர்ச்சி அல்லது அதி நவீன தோற்றத்தை விரும்புகிறீகள் என்றால்; இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP