herzindagi
image

Reception Gown: மணப்பெண்களுக்கான சிறந்த 5 வகையாக பிரைடல் கவுன் டிசைன்கள்

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கிவிட்டது. இந்த சீசனில் திருமண ஆடைகளை தேர்வு செய்வது பெரிய சவாலான விஷயம். அந்த வகையில் மணப்பெண்கள் அதிகம் விரும்பும் கவுன்களின் லேட்டஸ்ட் கலக்‌ஷன் பற்றி பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-11-27, 14:46 IST

மணப்பெண்கள் தனது திருமண கவுனைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அழகான அனுபவம். வாழ்க்கையின் மிக விசேஷமான நாளில் வரவேற்பு நிகழ்விற்கு பல பெண்கள் லெஹங்கா, வெஸ்டர்ன் கவுன், மற்றும் வெஸ்டர்ன் புடவைகள் போன்று அணிய விரும்புகிறார்கள்.  திருமண பெண்கள் ஆசைப்படும் கவுன்களில் சிலவற்றை பார்க்கலாம். ஒரு தனித்துவமான பாணி மற்றும் டிரெண்டிங் கவுகளை தேர்வு செய்ய விரும்பினால், இந்த 5 கவுன்கள் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இந்த திருமண சீசனில் புதிய பாணியில் மணப்பெண் கவுன்களை தேர்வு செய்ய ஐடியாஸ் இங்கே: 

 

மேலும் படிக்க:  திருமணத்தன்று பளபளப்பாக இருக்க மணப்பெண்கள் ஃபாலோ பண்ண வேண்டிய அழகுக்குறிப்புகள்

திருமணத்திற்கு சிறந்த கவுனை தேர்வு செய்வதில், அது உங்களுக்கு வசதியாக இருப்பது மட்டுமல்லாமல் சில அற்புதமான டிசைன்களையும் அமைத்துக்கொள்ளலாம். கருப்பொருளுக்கு ஏற்றவாறு மணமகளுக்கான திருமண கவுனை எப்போதும் தேர்வு செய்யவும். திருமணத்திற்கு பீச், ஆஃப்-ஒயிட், லைட் பிங்க் போன்ற லைட் ஷேடுகள் கொண்ட நிறங்கள் அழகாக இருக்கும். மேவ், அடர் பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் இருப்பது போன்ற இருண்ட நிற கவுன்களையும் தேர்வு செய்யலாம். திருமணத்திற்குப் பெண்கள் தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்ற உலோக நகைகளை அணிவார்கள். பிரைடல் கவுன் தேர்வுக்கு ஏற்ற நகைகளைச் சரியாக தேர்வு செய்யுங்கள். இவை அனைத்தையும் மனதில் கொண்டு திருமண கவுகள் இருக்க வேண்டும்.

 

சிறந்த 5 திருமண கவுன்கள்

 

திருமண கவுனைக் தேர்வு செய்வது எளிதான காரியம் அல்ல.இந்தத் திருமண சீசனில் மிகப் பெரிய டிரெண்டிங்கில் இருக்கும் சிறந்த மணப்பெண் ஆடைகளின் தொகுப்பை பார்க்கலாம்.

 

ப்ளூ கவுன் டிசைன்

 

சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடு மற்றும் அழகான ஆஃப் ஷோல்டர் தோள்பட்டை ரவிக்கை வடிவமைப்பு கொண்ட இந்த கேஸ்கேடிங் பவுடர் நீல நிற கவுன் திருமண நிகழ்வுக்கு சரியான தேர்வாக இருக்கும். திருமண விழாக்களில் ஒரு பிரமாண்ட தோற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் இது போன்ற கவுன்களை தேர்வு செய்யலாம்.

 

gown

Image Credit: pintrest


மஞ்சள் நிற கவுன் டிசைன்

 

அனைத்து விதமான பெண்களில் சரும நிறத்திற்கு ஏற்ற, கம்பீரமான ஆடம்பரம் மற்றும் நுட்பமான நுணுக்கம் ஆகியவை இந்த கவுனில் தெரிகிறது. கவர்ச்சியான கவுனுக்கு நிலையான குறிப்புகளாக உள்ளன. அழகான ரஃபிள்ஸ் மற்றும் சிதறிய சீக்வின்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கவுன், கண்களுக்கு வசீகரத்தை தருகிறது.

gown 1

Image Credit: pintrest

செர்ரி பிரைடல் கவுன்

 

இது ஒம்ப்ரே எஃபெக்ட்டுடன் கூடிய ஷிம்மர் டல்லே துணியால் செய்யப்பட்ட கிளாரெட் நிற பொருத்தப்பட்ட கவுன். இது சிக்கலான இறகு அலங்காரங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிக்கலான பீட் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் கவுன். திருமண நிகழ்வில் பிரமாண்ட தோற்றத்தை தரக்கூடியது.

gown 2

Image Credit: pintrest

 

ப்ளூ நெட் எம்ப்ராய்டரி கவுன்

 

நேவி ப்ளூ நெட் துணியில் பல்வேறு வகையான சீக்வின், மணிகள் மற்றும் கிரிஸ்டல்களில் எம்பிராய்டரி கவுன் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. கழுத்து பகுதிகளில் ப்ளங் வி நெக் கொண்டு அமைக்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் கவுன் வடிவமாகும். மணப்பெண்கள் தேர்வு செய்ய இந்த கவுன் சிறந்தவையாக இருக்கும்.

gown 3

Image Credit: pintrest

 

பிரவுன் நெட் ஃபிளேர்டு கட்அவுட் கவுன்

 

பல வண்ண மணிகள், சீக்வின் ஸ்டோன்கள் எம்பிராய்டரி மற்றும் பின்புறத்தில் கட்அவுட் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கவுன் அணிந்தால் தேவதை போல் தோன்றும். காபி நிறத்தில் இருக்கும் இந்த கவும் வரவேற்ப்புக்கு சிறந்த தேர்வாக இருக்கும்

gown 4

 Image Credit: pintrest


மேலும் படிக்க:  மணப்பெண்கள் எதிர்பார்க்கும் சரும அழகைப் பெற முயற்சிக்க வேண்டிய 3 ஃபேஸ் பெக்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]