அழகான மற்றும் பளபளப்பான சருமம் பெறுவது ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாகும். சருமத்தில் புள்ளிகள் இருந்தால் அல்லது சருமம் மந்தமாக இருந்தலே பெண்கள் பெரும்பாலும் அதை மறைக்க ஒப்பனையை செய்கிறார்கள். ஆனால் உண்மையில் உணவுமுறை சரியாக இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறீர்கள் என்றாலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் சரியான அளவில் இருந்தாலும் மற்றும் சரும பராமரிப்பு சரியாக இருந்தாலும் உங்கள் முகம் இயற்கையாகவே பளபளக்கும். அதே சமயம் இவையெல்லாம் சரியாக இல்லாவிட்டால் சில நேரம் மேக்கப் மூலம் முகத்திற்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கலாம். ஆனால் அவை உண்மையான தோற்றம் கிடையாது. உங்கள் முகம் மந்தமாக இருக்கும் அதை மறைக்கவே மேக்கப்பை நாடுகிறோம். மேக்கப் இல்லாமலேயே பளபளப்பான சருமத்தை பெற வல்லுநர்கள் அளித்த சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம். இது குறித்து டயட்டீஷியன் மனோலி மேத்தா தகவல் அளித்து வருகிறார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்.
மேலும் படிக்க: அடியோடு பொடுகை போக்கும் சூப்பரான ஹேர் மாஸ்க்
சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஊறவைத்த பருப்புகளைச் சேர்க்கவும். பாதாம், அத்திப்பழம் மற்றும் திராட்சைப்பழங்களில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாக்குகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தழும்புகள், சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களைப் போக்கலாம். உண்மையில் ஆரோக்கியமான சருமத்திற்கு ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது.
ஆரோக்கியமாக இருக்க 8-9 மணி நேரம் தூங்குவது மிகவும் முக்கியம். உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால் அது உங்கள் மனநிலை, செரிமானம் மற்றும் சருமத்தையும் பாதிக்கிறது. தூக்கமின்மையால், உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். மேலும் இதன் காரணமாக கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றி செரிமானம் குறைவதால் சருமத்தில் பருக்கள் தோன்றத் தொடங்கும்.
மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மன அழுத்தம் காரணமாக உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் அளவு குறைகிறது மற்றும் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகரிக்கிறது. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படும்.
பெரும்பாலும் பெண்கள் மற்றவர்களை செய்யும் அதே சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரின் சருமம் வகையும் வித்தியாசமானது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் சருமத்தின் வகைக்கு ஏற்ப டோனர், மாய்ஸ்சரைசர், ஃபேஸ் வாஷ் உள்ளிட்ட அனைத்தையும் தேர்வு செய்ய வேண்டும். சரும பராமரிப்பு வழக்கத்தை தினமும் பின்பற்ற வேண்டியது அவசியம். இதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.
மேலும் படிக்க: 5 நிமிடங்களில் மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் மேஜிக் பேக்!!
உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற இந்த நிபுணர் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும். எங்கள் கட்டுரைகள் மூலம் உங்கள் சிக்கலை தீர்க்க முயற்சிப்போம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க, Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit:Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]