தென்னிந்தியாவின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை மண் மனம் மாறாமல் பாரம்பரியத்துடன் 3 நாட்கள் கொண்டாடப்படும் மிகவும் விமர்சியான பண்டிகையாகும். பொங்கல் பண்டிகைகளுக்கு அழகையும் பாரம்பரியத்தையும் சேர்க்கும் விதமாக வந்திருக்கும் அழகிய புடவைகள் வாங்க பெண்கள் ஆசைப்படுவார்கள். நீங்கள் மலிவு விலையில் அல்லது ஆடம்பரமான பட்ஜெட்டில் புடவைகளைத் தேடுகிறீர்கள் என்றாலும், புடவை பார்த்ததும் மனம் கவர வேண்டும். அதுபோல் கலாச்சாரத்தின் செழுமையை பிரதிபலிக்கும் விதமாக சில ஃபேஷன் புடவைகள் சிலவற்றை பார்க்கலாம்.
மேலும் படிக்க: வெள்ளை நிற பட்டு புடவைகளின் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்
கருநீல நிறம் காப்பர் ஜரி புடவை
கருநீல நிறம் கொண்ட இந்த புடவை, பொங்கல் பண்டிகைக்கு தேர்வு செய்ய சிறந்த புடைவையாகும். இந்த பட்டு புடவை மென்மையாக இருப்பதால் உடுத்தவும் எளிதாக இருக்கும். இந்த புடவை பார்டர் கொஞ்சம் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நில நிறம் அனைத்து நிற பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும். தித்திக்கும் சர்க்கரை பொங்கலுக்கு இந்த புடவையை அணிந்த கொண்டாடவும்.
Image Credit:pinterest
நில நிற சாப்ட் சில்க் புடவை
இந்த நில நிற புடவை அனைத்து வயதினருக்கு ஏற்ற புடவையாக இருக்கும். புடவை முழுவதும் சிறு பூக்களின் வடிவத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறு பூக்கள் பார்க்க அழகிய பட்டாம்பூச்சி போல் வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. புடவையின் கீழ் பார்டர்களில் திருமண மாப்பிள்ளை குதிரையில் ஊர்வலம் செல்வதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையை மேளதாளத்துடன் ஊர்வலம் வருவதை போல் இந்த புடவையில் அழகாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புடவை பொங்கலுக்குத் தேர்வு செய்தால் பொருத்தமாக இருக்கும்.
Image Credit:pinterest
சந்தனம் நிற பட்டு புடவை
புடவை முழுவதும் கோடுகள் கொண்டு இந்த சந்தன நிற புடவை பொங்கல் கொண்டாட்டத்திற்கு அணிய ஏற்ற புடவையாகும். இந்த புடவையில் மூன்று அடுக்குகள் கொண்ட பார்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. சந்த நிறத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நில நிறமும், சிவப்பு நிறமும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நில நிறத்தில் அழகிய மயில் வடிவத்தை ஜரிகை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Image Credit:pinterest
மஞ்சள் மற்றும் ஊதா நிற புடவை
இந்த மஞ்சள் நிற புடவை விஷேச நாட்களுக்கு ஏற்ற புடவை. இந்த பொங்கலை இந்த புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்தால் அனைத்து கண்களும் அவர்களில் புடவை மேல் மட்டுமே இருக்கும். இந்த புடவையின் சிறப்பு அம்சம் அதன் வேறுபட்ட நிறம். புடவையின் ஜாரி பகுதிகளில் மயில் மற்றும் பனாரசி வடிவங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் வயலட் பல்லு தங்க ஜாரியில் மயில் மற்றும் மலர் வடிவங்களைக் கொண்டுள்ளது.
Image Credit:pinterest
டூயல் டோன் கட்டன் சில்க் பனாரசி புடவை
இந்த புடவை வடமாநிலத்தில் புகழ்பெற்ற புடவையான பனாரசி வடிவத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புடவையும் பராம்பரிய பொங்கல் விஷேச நாட்களுக்கு ஏற்ற புடவை.
Image Credit:pinterest
மேலும் படிக்க: கருப்பு நிற புடவைகளில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் தமன்னா
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation