உலகமுழுவது கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றால் கண்களுக்கு வண்ணமயமான உலகம் தோன்றும். இந்த தினத்தில் புத்தாடை அணிவது, புதுப்புது மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என உற்சாகத்தில் இருக்கும் நாளாக இருக்கும். கிறிஸ்மஸ் மேக்கப் பார்க்க பளிச்சென்று, அனைவரையும் மயக்கும் வகையில் இருக்க வேண்டும். வீட்டிற்கு விருந்தினர் வரும் போது உங்கள் அழகை வெளிப்படுத்தும் சில மேக்கப் லுக் சிலவற்றைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஒரிஜினல் பனாரசி பட்டு புடவைகளை அடையாளம் கண்டு வாங்குவது எப்படி?
கோல்டன் ஷேடோ மேக்கப் கண்களுக்கு கொடுத்தால் ஒருவிதமான பிரகாசத்தை முகத்திற்கு கொடுக்கிறது. தங்கம் மற்றும் தடித்த உலோக நிறங்கள் பயன்படுத்து சருமத்தை மினுமினுக்க செய்யும். இந்த வித மேக்கப் முகத்தில் பளபளப்பையும் ஒளி மின்னலைப் தரக்கூடியதாக இருக்கும். இந்த மேக்கப் வெண்கலத்துடன் தங்கம் சேர்ந்து முகத்தில் பயன்படுத்துவதால் ஒருவித அழகை வெளிப்படுத்தும்.
Image Credit: pinterest
கன்னங்களுக்கு இரண்டு பக்கமும் பிங் ஃப்ளஷ் பயன்படுத்தி முகத்திற்கு ஒரு தனி அழகை கொடுக்கவும். முகம் முழுவதும் பொதுவான மேக்கப் போட்டு, கன்னங்கள் இரண்டு பக்கமும் பிங்க் நிற ஃப்ள்ஷ் பயன்படுத்தவும், இது உங்களை இளஞ்சிவப்பு நிறத்தை தரக்கூடியது. உங்கள் முகத்தை பிரகசிக்க வைக்கிறது. இந்த கிறிஸ்துமஸ் இந்த மேக்கப் ட்ரை பண்ணி பாருங்கள்.
Image Credit: pinterest
முகத்திற்கு மேக்கப் குறைவாக போட்டு, உதடுகளுக்கு நல்ல சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடுவது, இந்த கிறிஸ்துமஸ் மேலும் அழகை சேர்க்கிறது. முகத்தில் உதடுகளுக்கு அதிகம் கவனம் செலுத்தினால் ஒரு தனி அழகை பெறலாம். அதிலும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் ஒரு தனி அழகை தரும். இந்த கிறிஸ்துமஸ் உங்கள் உதட்டு சயத்தின் மூலம் அழகை வெளிப்படுத்துங்கள்.
Image Credit: pinterest
பளபளப்பான உதடுகள் இந்த கிறிஸ்துமஸ் தோற்றத்திற்குப் பிரகாசத்தையும் ஒரு தனி நேர்த்தியையும் சேர்க்கும். முகத்திற்கு இயற்கையான பளபளப்பை தேர்வு செய்து, அதனுடன் உதட்டிற்குச் சிவப்பு, பெர்ரி அல்லது நிர்வாணமாக இருக்கும் நிறங்களை தேர்வுசெய்யலாம். அதனால் முகம் இளமையாகத் தெரியும்.
Image Credit: pinterest
நியூட் மேக்கப் முகத்திற்கு இயற்கையான அழகைத் தரக்கூடியது. வண்ணமயமான மாய்ஸ்சரைசர், நுட்பமான ப்ளஷ் மற்றும் நியூட் உதடு ஆகியவற்றுடன் ஒளிரும் மற்றும் குறைபாடற்ற சருமத்தை வெளிப்படுத்தும்.
Image Credit: pinterest
மேலும் படிக்க: கருப்பு நிற புடவைகளில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் தமன்னா
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]