கோடை காலத்தில் 40 டிகிரிக்கு மேல் கொளுத்தும் வெயில் காரணமாக நாம் தலையில் உயிர்கவசமாக அணியும் ஹெல்மெட் கடுமையான துர்நாற்றம் வீசும். தலையில் முடியில் சுரக்கும் வியர்வை, ஒட்டும் அழுக்குகள், மாசுபாடு காரணமாக ஹெல்மெட்டில் இருந்து வெளிவரும் வாசனை குமட்டலை ஏற்படுத்தும். பெரும்பாலான ஹெல்மெட்டில் பஞ்சு பயன்படுத்தப்படுகிறது. நீண்ட காலமாக ஒரே ஹெல்மெட்டை பயன்படுத்தும் போது அல்லது ஹெல்மெட் மாற்றாமலே உபயோகித்து வந்தால் அதிலிருந்து வெளிவரும் வாசனை மிகவும் மோசமாக இருக்கும். ஹெல்மெட்டில் துர்நாற்றம் வீசாமல் தடுத்திட 5 எளிய குறிப்புகள் இங்கு பகிரப்பட்டுள்ளன.
இப்போது விற்கப்படும் ஹெல்மெட் பாகங்களாக கழற்கும் வகையில் உள்ளது. எனவே ஹெல்மெட்டை தனித் தனி பாகங்களாக கழற்றி எடுத்து விடவும். நீங்கள் ஹெல்மெட் வாங்கிய போது சிறிய புத்தகம் கொடுத்திருப்பார்கள். அதை படித்து ஹெல்மெட் சேதாரம் அடையாதபடி கழற்றிவிடுங்கள்.
ஹெல்மெட் பாகங்களை சோப்பு தண்ணீரில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். சோப்பு தண்ணீர் பயன்படுத்துவதால் கடினமான அழுக்குகள் அகல தொடங்கும். கடுமையான துர்நாற்றத்தை விலக்குவதற்கு இது ஒன்றே வழி. ஹெல்மெட் தனித் தனி பாகங்களாக கழற்ற முடியவில்லை எனில் பெரிய பக்கெட்டில் மூழ்க செய்திடவும்.
இப்போது ஈரமான காட்டன் துணி எடுத்து ஹெல்மெட்டின் பாகங்களை துடைக்கவும். சோப்பு தண்ணீர் பயன்படுத்தியதால் அழுக்குகள் எளிதாக வந்துவிடும். அதிக அழுத்தம் கொடுத்து ஹெல்மெட் பாகங்களை கீழே போட்டு உடைத்துவிடாதீர்கள். ப்ரஷ் பயன்படுத்தாதீர்காள். ஏனெனில் ஹெல்மெட்டின் வர்ணம் போய்விடும். ஹெல்மெட் சுத்தப்படுத்துவதற்கு சில பொருட்கள் உள்ளன. நீங்கள் அதை வாங்கியும் பயன்படுத்தலாம். நன்கு சுத்தப்படுத்திய பிறகு குழாய் தண்ணீரில் கழுவவும். அழுக்கு, கெட்ட வாசனை மொத்தமும் வெளியேறும்.
அடுத்ததாக ஹெல்மெட்டினை வெயிலில் காயவிடவும். நேரடி சூரிய வெளிச்சத்திற்கு கீழ் வைக்க வேண்டாம். கொஞ்சம் நிழலான பகுதியில் வைக்கவும். ஹெல்மெட் காய்ந்த பிறகு மீண்டும் காட்டன் துணி வைத்து துடைத்து எடுக்கவும். இறுதியாக கழற்றிய பாகங்களை ஒன்று சேர்த்து விடுங்கள்.
உங்களிடம் வாசனை திரவியம் இருந்தால் ஹெல்மெட் உள்ளே அதை ஸ்ப்ரெ செய்யவும். அதன் பிறகு அரைமணி நேரம் கழித்து ஹெல்மெட் அணிந்து பயன்படுத்தவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]