விநாயகர் சதுர்த்திக்கு வீட்டை எளிதில் சுத்தம் செய்ய உதவும் குறிப்புகள்!

பண்டிகை காலங்களுக்கு வீட்டை எளிதில் சுத்தம் செய்வதற்கு இந்த குறிப்புகள் உதவிகரமாக இருக்கும்...

how to clean your house step by step

பண்டிகை நாட்கள் என்றாலே வீட்டு வேலை இரட்டிப்பாகிவிடும். மகாலட்சுமி குடியேறவும், தெய்வங்களின் ஆசியைப் பெறவும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பண்டிகைக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன... பிறகு வேலை செய்யலாம் என நினைத்தால் கடைசி நேரத்தில் அனைத்தையும் அவசர அவசரமாக முடிக்க வேண்டிய சூழல் வரும். வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரிப்பது முதல் பலகாரங்கள் தயாரிப்பு வரை போதுமான நேரம் ஒதுக்கினால் மட்டுமே இதை செய்யத் தவறிவிட்டோம் அதை செய்யத் தவறிவிட்டோம் என கவலைப்பட தேவை இருக்காது. மேலும் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டீர்கள். வீட்டைச் சுத்தப்படுத்துவது கடினம் என நீங்கள் நினைத்தால் இந்த பதிவில் உள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்...

cleaning tips for vinayagar chaturthi festive

தேவையில்லாத பொருட்கள்

  • வீட்டை சுத்தப்படுத்த நினைத்துவிட்டால் நாம் முதலில் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் தேவையற்ற பொருட்களை குப்பையில் போடுவது. உடைந்த விளையட்டு பொருட்கள், வீட்டு பொருட்கள், காலாவதியான மாத்திரைகள், பழைய செய்தித்தாள்கள், பழுதடைந்த மின்சாதனப் பொருட்களை வீட்டில் இருந்து அகற்றவும்.
  • பீரோவில் வைத்திருக்கும் கிழிந்த துணியை குப்பையில் போடவும். பயன்படுத்த விருப்பமில்லாத பழைய துணியை தானம் செய்யலாம்.

சுத்தம் செய்யும் முறை

  • வீட்டை சுத்தம் செய்யும் போது எப்போதுமே மேலிருந்து ஆரம்பிக்கவும். ஒட்டடை அடித்து மின் விசிறியில் இருக்கும் தூசியை தட்டவும். இதற்கு முன்பாக பழைய பேப்பர் விரித்து வைக்கவும். தூசி தட்டியவுடன் அவற்றை அப்படியே குப்பையில் போடலாம்.
  • ஈரமான துணியை பயன்படுத்தி ஜன்னல்கள், கதவுகளில் உள்ள அழுக்கை அகற்றவும்.
  • மெத்தை, சோபாவின் ஷீட்களில் பொதிந்து கிடக்கும் அழுக்கை தண்ணீரில் ஊறவைத்து நன்கு துவைத்து சுத்தம் செய்யவும்.
  • டிவி, மடிக்கணினி, ஏசி, ஃபிரிட்ஜ் ஆகியவற்றை வழக்கம் போல் துடைக்கவும்.
  • கிச்சன், பாத்ரூமில் உள்ள குழாய்கள், சிங்க் ஆகியவற்றை கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்துங்கள்.
  • கிச்சன் அடுப்பை சோப்பு தண்ணீர் பயன்படுத்தி கழுவலாம்.
  • ரசாயன திரவம் பயன்படுத்தி தரையில் உள்ள கறைகளை நீக்கி பளபளப்பாக்கிடுங்கள்.
  • சில கறைகளை அகற்றுவது கடினமாக தோன்றலாம். இதற்கு பேக்கிங் சோடா மற்றும் ஸ்க்ரப் பயன்படுத்தவும். சிலர் உப்பு பயன்படுத்துவார்கள்.
  • வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து ஜன்னல் கம்பிகளில் ஸ்ப்ரே செய்து தண்ணீர் ஊற்றி கழுவுங்கள்.
  • பித்தளை பாத்திரங்களை கழுவ வினிகர், உப்பு கலவை போதுமானது. இவை இரண்டையும் கலந்து பாத்திரத்தில் ஊறவிட்டு அதன் பிறகு தண்ணீரில் கழுவி வெயிலில் காய விட்டால் பாத்திரங்கள் மினுக்கும்.

ஒருங்கிணைக்கவும்

வீட்டை முழுமையாக சுத்தப்படுத்திய பிறகு எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே வைத்து ஒருங்கிணைப்பது முக்கியம். பல பொருட்களை கழித்த பிறகு காலி இடங்கள் இருக்கும். எனவே இட வசதிக்கு ஏற்ப பொருட்களை அடுக்கவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்...

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP