இக்காலத்துப் பெண்கள் சினிமா நடிகைகள் போன்று முக பாவனை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கேற்ற இணையதளங்களிலும் விதவிதமான அழகு சாதனப் பொருள்கள் குறித்த விளம்பரங்களும் அவ்வப்போது வெளியாகிறது. இதையெல்லாம் பயன்படுத்தினாலும் முகத்தைப் பொலிவாக வைத்திருக்க முடியுமா? என்ற நிச்சயம் இருக்காது. கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே நிலைத்திருக்கும். இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை உள்ளதா? அப்படியென்றால் வீட்டில் தினமும் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட சில பொருட்கள் போதும். அவை என்னென்ன? எப்படி முகத்தைப் பொலிவாக்க உதவும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: தயிர் இருந்தால் போதும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்!
முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக மாதத்திற்கு ஒருமுறையாவது சருமத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யக்கூடிய ஸ்க்ரப்பிங் முறையை மேற்கொள்கிறார்கள். ஸ்கரப்பிங் செய்யும் போது சருமத்தின் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
எந்தளவிற்கு தேங்காயை அதிகளவில் பயன்படுத்துகிறோமோ? அந்தளவிற்கு இளமையான தோற்றத்தைப் பெற முடியும். சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய தேங்காய் ஸ்கரப் சிறந்த தேர்வாக உள்ளது. இதை வீட்டிலேயே தயார் செய்வதற்கு முதலில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேங்காண் எண்ணெய் கலந்து ஸ்கரப் போன்று தயார் செய்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க: முகம் மற்றும் கூந்தல் பொலிவிற்கான ரகசியம் ஏபிசி ஐஸ் க்யூப்கள் தான் ; எப்படி தெரியுமா?
இந்த கலவையை கழுத்து மற்றும் முகத்தில் தேய்த்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இந்த ஸ்கரப் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதோடு புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க கேரட் ஸ்கரப்பைப் பயன்படுத்தவும். கேரட், தயிர், எலுமிச்சை சாறு, பன்னீர் போன்றவற்றை மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முகத்திற்குப் பிரகாசத்தைக் கொடுக்கும். கேரட் உள்ள அனைத்து சத்துக்களும் அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றதாக இருக்கும். எனவே தயக்கம் இன்றி பயன்படுத்தலாம்.
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுன் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி கழுவினால் போதும். சருமம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி PH அளவை சமநிலைப்படுத்த உதவும்.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
அனைத்து வகை சருமம் கொண்டவர்களும் எவ்வித தயக்கமும் இன்றி பாலைப் பயன்படுத்தலாம். இதை வைத்து ஸ்கரப் செய்ய வேண்டும் என்றால் முதலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ்சுடன் 1 டேபிள் ஸ்பூன் கலந்து ஊற வைக்கவும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் ஸ்கரப் செய்யவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மென்மைாக்குகிறது.
Image source - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]