herzindagi
image

Kitchen hacks in tamil: குக்கரில் படிந்திருக்கும் கருமை நிறம்; முகத்திற்கு பூசும் பௌடர் கொண்டு ஈசியா அகற்றலாம்

Kitchen hacks in tamil: குக்கரில் படிந்திருக்கும் கருமை நிறத்தை, முகத்திற்கு பூசும் பௌடர் கொண்டு எப்படி ஈசியாக அகற்றலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த கிச்சன் டிப்ஸ் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-09-13, 14:13 IST

புதிதாக வாங்கிய குக்கர் கூட சில நாட்கள் பயன்படுத்திய பின்னர் அதன் அடிப்பகுதி கருமையாக மாறி விடும். எவ்வளவு சுத்தமாக இதனை கழுவினாலும், இந்த கருமையை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால், ஒரு சிம்பிள் டிப்ஸை பின்பற்றுவதன் மூலம் பழைய குக்கரை கூட பார்ப்பதற்கு புதிது போன்று மாற்ற முடியும். இதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் போன்று வீடு முழுவதும் மனம் வீச வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

முதலில், அடுப்பை பற்ற வைக்க வேண்டும். இனி, அடுப்பின் மீது குக்கரை வைத்து சுமார் ஒரு நிமிடத்திற்கு சூடுபடுத்த வேண்டும். இதையடுத்து, அடுப்பை அணைத்து விடலாம். இதற்கடுத்து, குக்கரின் அடிப்பகுதி மேலே இருக்கும் வகையில், அதனை அடுப்பின் மீது தலைகீழாக வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது குக்கர் முழுவதும் சூடு பரவும்.

 

குக்கரை சுத்தப்படுத்தும் முறை:

 

இதன் பின்னர், குக்கரில் கருமை படிந்து இருக்கும் இடங்களில் முகத்திற்கு பூசும் பௌடரை தூவ வேண்டும். இனி, எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதனை பௌடர் தூவி இருக்கும் இடங்களின் மீது பிழிந்து விட வேண்டும். இப்போது, அதே எலுமிச்சை தோலை கொண்டு பௌடரை நன்கு தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும் போது சிறிதளவு ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளலாம்.

Talcum powder

 

இவ்வாறு நன்கு தேய்க்கும் போது குக்கரில் இருக்கும் கருமை நிறம் மறைவதை நாம் பார்க்கலாம். இதன் பின்பு, சாதாரணமாக பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்க்ரப்பரை கொண்டு குக்கரில் நன்றாக தேய்க்க வேண்டும். இறுதியாக, குக்கரை தண்ணீர் தெளித்து கழுவி விடலாம். இப்படி செய்தால் நம்முடைய குக்கரில் இருக்கும் கருமை நிறம் நீங்கி, பார்ப்பதற்கு புதியது போன்று ஜொலிக்கும். இந்த சிம்பிள் டிப்ஸை பின்பற்றி பாருங்கள்.

மேலும் படிக்க: இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!

 

சோப் ஹேக்:

 

இதேபோல் மற்றுமொரு பயனுள்ள ஹேக்கை பார்க்கலாம். பெரும்பாலும், நாம் வெளியே செல்லும் போது கை கழுவுவதற்கு ஹேண்ட் வாஷ் இல்லையென்றால் சிரமமாக இருக்கும். இதற்காக, நாமும் ஹேண்ட் வாஷை கொண்டு செல்ல முடியாது. இது போன்ற தருணங்களில் நமக்கு உதவும் வகையில் சிறிய டெக்னிக்கை கையாளலாம். இதற்காக, நாம் வீட்டில் பயன்படுத்தும் சோப் ஒன்றை புதியதாக வாங்கிக் கொள்ள வேண்டும்.

Hand washing

 

இப்போது, இந்த சோப்பில் இருந்து சிறிய பகுதியை சிறு, சிறு துண்டுகளாக சீவி எடுத்துக் கொள்ளலாம். இந்த சீவி எடுத்த துண்டுகளை ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு நம்முடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில், ஹேண்ட் வாஷ் இல்லாத இடங்களில், இவ்வாறு சீவி எடுத்த சோப்பு துண்டுகளை பயன்படுத்தி கை கழுவ முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]