herzindagi
image

புதிய பாத்திரங்களில் இருந்து ஸ்டிக்கரை அகற்ற முடியவில்லையா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

புதிதாக வாங்கிய பாத்திரங்களில் இருந்து ஸ்டிக்கரை எவ்வாளு எளிமையான முறையில் ஸ்டிக்கரை அகற்றலாம் என்று இந்த குறிப்பில் பார்க்கலாம். இதற்காக 5 வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
Editorial
Updated:- 2025-09-07, 10:36 IST

ஒவ்வொரு முறையும் புதிய தட்டுகள், கிண்ணங்கள் அல்லது கோப்பைகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் போது, அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை அகற்றுவது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். இவை பிராண்ட் லேபிள்களாகவோ அல்லது அலங்கார ஸ்டிக்கர்களாகவோ இருக்கலாம். இவற்றை அகற்றும்போது, அதில் இருக்கும் பசை பொருட்களின் அழகை கெடுப்பதுடன், எளிதில் அழுக்காகவும் கூடும்.

மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் போன்று வீடு முழுவதும் மனம் வீச வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

 

இத்தகைய ஸ்டிக்கர்களை, பாத்திரங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் எளிதாக அகற்ற சில வழிகள் உள்ளன. சோப்பு நீர், வினிகர், எண்ணெய் அல்லது ஒரு ஹேர் ட்ரையர் மூலம் ஸ்டிக்கர்களை எளிதில் அகற்ற முடியும். அதற்கான செயல்முறைகளை தற்போது பார்க்கலாம்.

 

1. சூடான சோப்பு நீரில் ஊறவைத்தல்:

 

ஒரு பாத்திரத்தில் சூடான நீரை நிரப்பி, அதில் சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்க்கவும். பின்னர், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் பாத்திரத்தை அதில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். சூடான நீர் பசையை தளர்த்த உதவும். மேலும், இதில் இருக்கும் சோப்பு, பசையை கரைக்க உதவும். இதனால் ஸ்டிக்கரை எளிதாக உரிக்கலாம்.

 

2. வினிகர் பயன்படுத்தும் முறை:

 

ஒரு கர்ச்சீஃப் அல்லது காட்டனை வினிகரில் நனைத்து, அதை ஸ்டிக்கரின் மேல் வைக்கவும். இதை குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். வினிகரில் உள்ள அமிலம் பசையை கரைத்து, ஸ்டிக்கரை சிரமமின்றி உரிக்க உதவும்.

Kitchen tips

 

3. ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் முறை:

 

ஹேர் ட்ரையரை குறைந்த அல்லது மிதமான சூட்டில் வைத்து, ஸ்டிக்கரை சூடாக்கவும். குறிப்பாக, இதனை ஸ்டிக்கருக்கு சில அங்குலங்கள் தொலைவில் வைத்து, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு சூடாக்க வேண்டும். வெப்பம் பசையை மென்மையாக்கி, ஸ்டிக்கரை எளிதாக உரிக்க உதவி செய்யும்.

மேலும் படிக்க: இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!

 

4. ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு தேய்க்கலாம்:

 

சிறிய அளவு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை ஸ்டிக்கரின் மீது தடவவும். இதை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இந்த எண்ணெய் பசையை தளர்த்தும். இதன் பின்னர் ஒரு துணியை பயன்படுத்தி ஸ்டிக்கரை நீக்கி, பசையை துடைக்கலாம்.

Kitchen hack

 

5. பிளாஸ்டிக் ஸ்கிராப்பரை பயன்படுத்தலாம்:

 

இது போன்ற முறைகளை பின்பற்றி ஸ்டிக்கரை அகற்றிய பின்னர், பிளாஸ்டிக் ஸ்கிராப்பரை பயன்படுத்தி அந்த இடத்தை மெதுவாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் அதில் இருக்கும் பசை முற்றிலும் நீங்கி விடும். ஆனால், இப்படி செய்யும் போது பாத்திரத்தில் கீறல் விழாமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.

 

இவற்றில் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி புதிய பாத்திரங்களில் இருக்கும் ஸ்டிக்கரை எளிதாக நாம் அகற்ற முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]