துணிகளில் எண்ணெய் கறையா? கவலைய விடுங்க.. இந்த 5 பொருட்கள் இருந்தா போதும்!

சமையல் எண்ணெய், சாலட் டிரஸ்ஸிங், தக்காளி சாஸ் அல்லது கிரீஸ் எதுவாக இருந்தாலும், இந்த கறைகளை அகற்றுவது நமக்கு கடினமாக இருக்கும். அந்த வரிசையில் உங்கள் ஆடைகளில் இருந்து அந்த பிடிவாதமான எண்ணெய் கறைகளை அகற்ற உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
image

இன்றைய காலகட்டத்தில் ஆடைகளில் எண்ணெய் கறைகள் படிவது ஒரு வெறுப்பூட்டும் மற்றும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. குறிப்பாக நம்மில் பலரும் இதன் காரணமாகவே வெள்ளை ஆடைகளை அதிகம் பயன்படுத்த யோசிப்பது உண்டு. அதே போல விஷேஷ நாட்களில் புது ஆடைகளை அணியும் போது நம் குழந்தைகளை கூட ஆடைகளில் சிந்தி விடாமல் சாப்பிட சொல்வோம். ஒரு சில ஆடைகளில் எண்ணெய் கறை படிந்து விட்டால் அவ்வளவு தான். அந்த ஆடையின் அழகே மாறிவிடும். சமையல் எண்ணெய், சாலட் டிரஸ்ஸிங், தக்காளி சாஸ் அல்லது கிரீஸ் எதுவாக இருந்தாலும், இந்த கறைகளை அகற்றுவது நமக்கு கடினமாக இருக்கும். அந்த வரிசையில் உங்கள் ஆடைகளில் இருந்து அந்த பிடிவாதமான எண்ணெய் கறைகளை அகற்ற உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

டிஷ் சோப் மற்றும் பேக்கிங் சோடா:

துணிகளில் இருந்து எண்ணெய் கறைகளை அகற்றுவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று டிஷ் சோப் மற்றும் பேக்கிங் சோடா கலவையைப் பயன்படுத்துவதாகும். ஒரு சிறிய அளவு டிஷ் சோப்பை நேரடியாக கறையின் மீது தடவி மெதுவாக தேய்க்கவும். பின்னர், அந்த பகுதியில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து, சில நிமிடங்கள் ஊற வைக்கவும். இறுதியாக, ஆடையை வெதுவெதுப்பான நீரில் துவைத்து, காற்றில் உலர விடுங்கள்.

வெள்ளை வினிகர்:

uses-for-vinegar-3866168-Hero-8021da2de0ff4875a067b2767502b829

துணிகளில் இருந்து எண்ணெய் கறைகளை அகற்றுவதற்கான மற்றொரு சிறந்த இயற்கை தீர்வாக வெள்ளை வினிகர் உள்ளது. கறை படிந்த பகுதியை வெள்ளை வினிகரில் 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் வழக்கம் போல் ஆடையை துவைக்க வேண்டும். வினிகரின் அமிலத்தன்மை எண்ணெயை அகற்ற உதவுகிறது, இதனால் கறையை நீக்குவது எளிது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு ஒரு சக்திவாய்ந்த இயற்கை கிளீனராகும், இது துணிகளில் இருந்து எண்ணெய் கறைகளை அகற்ற உதவும். சிறிதளவு எலுமிச்சை சாற்றை கறையின் மீது பிழிந்து, வழக்கம் போல் ஆடையை துவைக்கும் முன்பு சில நிமிடங்கள் ஊற விடுங்கள். எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் பிடிவாதமான எண்ணெய் கறையை துணியில் இருந்து நீக்கிவிடும்.

மேலும் படிக்க: காசு செலவில்லாமல் வீட்டிலேயே கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்!

சோள மாவு அல்லது டால்கம் பவுடர்:

corn-starch-powder

பிடிவாதமான எண்ணெய் கறைகளுக்கு, எண்ணெயை உறிஞ்சுவதற்கு நீங்கள் கார்ன் ஸ்டார்ச் அல்லது டால்கம் பவுடர் பயன்படுத்தலாம். கறையின் மீது பவுடர் தூவி, சில மணி நேரம் அல்லது இரவு முழுக்க ஊற விடுங்கள். இது ஆடைகளில் இருந்து எண்ணெயை வெளியே எடுக்க உதவும், இதனால் துவைப்பது எளிதாகும்.

அந்த வரிசையில் இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கடுமையான இரசாயனங்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்களை நம்பாமல் உங்கள் ஆடைகளில் இருந்து எண்ணெய் கறைகளை திறம்பட அகற்ற உதவும். உங்கள் கிட்சனில் உள்ள பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் ஆடைகளை புதியதாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கலாம் மற்றும் நேரத்தையும் பணத்தையும் கூட மிச்சப்படுத்தலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP