Milk with Dates for Weight Loss : உடல் எடை குறைய பாலுடன் பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிடுங்க!

பால் மற்றும் பேரிச்சம் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இக்கலவையை பயன்படுத்தி நல்ல விளைவுகளை காணலாம்..

weight loss with dates milk

சுவை நிறைந்த பால் மற்றும் பேரிச்சம் பழத்தில் ஆரோக்கிய நன்மைகளும் அதிக அளவில் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏராளமான நற்பலன்களையும் கொடுக்கும். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

பேரிச்சம்பழத்தில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் பால் புரதத்தின் நல்ல ஆதாரம் ஆகும். இதனை தொடர்ந்து குடித்து வர எலும்புகள் மற்றும் தசைகள் தொடர்பான பல பிரச்சனைகள் குணமாகும். இக்கலவையானது எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்துகிறது. இதில் நிறைந்துள்ள இரும்புச் சத்து இரத்த சோகை பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். இந்த பானத்தில் உள்ள வைட்டமின் B6 மூளை மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இதை இரவு வேலையில் குடிக்கும் பொழுது நல்ல தூக்கத்தையும் பெறலாம்.

உடல் எடையை குறைக்க பேரிச்சம் பழம் பால்

dates with milk for weight loss

பேரீச்சம்பழம் மற்றும் பாலை சேர்த்து குடிப்பதால், எவ்வித சோர்வும் இன்றி உடல் எடையைக் குறைக்கலாம். பாலில் புரதம் உள்ளது, பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இரண்டிலும் உடலுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இவற்றை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளும் பொழுது நல்ல விளைவுகளை காணலாம்.

தேவையான பொருட்கள்

  • நறுக்கிய பேரீச்சம்பழம் 3-4
  • பால் - 1 கப்

செய்முறை

dates milk for weight loss

  • ஒரு பாத்திரத்தில் பாதை ஊற்றி காய்ச்சவும்.
  • பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் நறுக்கிய பேரிச்சம் பழங்களை சேர்க்கவும்.
  • அடுப்பை குறைந்த தீயில் வைத்து பாலை கொதிக்க விடவும்.
  • இதை 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பேரிச்சம்பழங்கள் வெந்து பாலின் நிறம் மாறிய பிறகு அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும்.
  • பால் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது குடிக்கவும்.
  • பேரிச்சம் பழங்களை அதிகம் சேர்க்க கூடாது. இதை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் மட்டுமே முழு நன்மைகளையும் பெற முடியும். உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் இக்கலவையை எடுத்துக் கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்: 30 வயதை கடந்தும் ஃபிட் ஆக இருக்க, தமன்னா செய்யும் யோகாசனங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP