நம்மில் பலரும் காலை உணவை சாப்பிட மறந்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் சோம்பேறித்தனமாக இருக்கும் போது சமைக்க கஷ்டமாக இருக்கும், அல்லது வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமைக்க நேரம் கிடைக்காமல் போகும். காலையில் உணவை தவறவிடாமல் சாப்பிடுவதற்கு வெறும் பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு டிபன் தான் இந்த அவல். அதேபோல இதை வெறும் சுடுதண்ணீர் இருந்தால் போதும் சமைத்து விடலாம். அவ்வளவு எளிதாக செய்யக்கூடிய இந்த அவலை தான் போகா என்று கூறுவார்கள். இந்த அவல் சாப்பிடுவதினால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தினமும் அரிசி சாதத்தை சாப்பிட்டு சோம்பேறித்தனமாக இருக்கும்போது அவல் வாங்கி அதை தண்ணீரில் ஊறவைத்து, சிறிது எண்ணெய் கடுகு சேர்த்து தாளித்து பத்து நிமிடத்தில் இந்த போகா செய்து சாப்பிடலாம். இன்னும் சுலபமாக அவலை ஊற வைத்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் சாப்பிட்டு வரலாம்.
அவல் என்பது ஒரு லேசான உணவு பொருளாகும். இதனால் நம் உணவு செரிமான செயல்முறை எளிதாக செயல்படுகிறது. இது ஜீரணிக்க எளிதாக இருப்பதால் குடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் குடல் வீக்கம் ஏற்படாமல் இருக்க பெரிதும் உதவுகிறது. அதேப் போல நீண்ட நேரம் பசி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் இந்த அவல் உதவுகிறது. அதோடு நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்கி அமிலத்தன்மையை தவிர்க்கவும் இந்த அவல் உதவும்.
இந்த அவலில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இது நம் உடலை உற்சாகப்படுத்த தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நம் உடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் சுமார் 76.9% மற்றும் கொழுப்புகளில் 23 சதவீதம் இந்த அவலில் நிறைந்துள்ளது. இதனால் இது உங்கள் உடலில் கொழுப்பு சேராமல் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த அவலில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீட்டை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இது நம் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்க உதவும். எனவே நீரிழிவு நோயாளிகளும் சர்க்கரை நோயாளிகளும் இந்த அவலை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
அவலில் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக இருக்கவும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சமைத்த அவலின் ஒரு கிண்ணம் அளவில் சுமார் 250 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனால் உங்கள் மூளை தடையின்றி ஆற்றலுடன் செயல்பட உதவும்.
இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க அவல் பெரிதும் உதவும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் இது உங்கள் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கொடுத்து ரத்த சோகை ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் கூட இந்த அவல் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
தினமும் அரிசி சாதம் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால் அதே போல சுவையிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளும் நார்ச்சத்தும் நிறைந்துள்ள அவல் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாது. இதற்கு பதிலாக நம் உடல் எடை எளிதாக குறைக்க இது பெரிதும் உதவும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]