herzindagi
image

வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க

உடல் எடை குறைப்பதிலிருந்து ரத்த சர்க்கரையை சீராக்குவது வரை பல்வேறு நலன்களை இஞ்சி தருகிறது. அந்த வரிசையில் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.  
Editorial
Updated:- 2025-05-27, 11:45 IST

தினசரி காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீக்கு பதிலாக ஆரோக்கியமான பானங்களை அருந்துவது உடல் நலத்தை மேம்படுத்தும். இந்த வகையில், இஞ்சித் தண்ணீர் ஒரு மருந்துச் சாறு போன்றது. இது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு அளிக்கிறது. உடல் எடை குறைப்பதிலிருந்து ரத்த சர்க்கரையை சீராக்குவது வரை பல்வேறு நலன்களை இஞ்சி தருகிறது. அந்த வரிசையில் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.  

செரிமானத்திற்கு உதவும் இஞ்சி:


இஞ்சியில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற உயிரியல் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, உணவு செரிமானத்தை எளிதாக்குகின்றன. இதனால் தான் நம் வீடுகளில் சமைக்கும் பெரும்பாலான உணவு பொருட்களில் இஞ்சி ஒரு முக்கிய பங்காக உள்ளது.

வீக்கத்தைக் குறைக்கும் இயல்பு:


இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன, இது உடலின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் இஞ்சி தண்ணீர் குடிப்பதன் மூலம் மூட்டு வலி, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்துகள் குறையும்.

வாந்தி மற்றும் குமட்டலுக்கான தீர்வு:


சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாந்தி அல்லது குமட்டல் ஏற்படலாம். இதற்கு இஞ்சி தண்ணீர் ஒரு சிறந்த தீர்வாகும். வெறும் வயிற்றில் இந்த இஞ்சி தண்ணீர் குடிப்பதால் வயிற்றுக் கோளாறுகள் மெதுவாகக் குறையும்.

1800ss_getty_rf_ginger

வலி நிவாரணியாக இஞ்சி:


இஞ்சியில் உள்ள சத்துக்கள் தலைவலி, மாதவிடாய் போன்ற தசைப்பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த இஞ்சி தண்ணீர் குடித்து வந்தால் வலி நிவாரணம் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:


இஞ்சியில் அதிகமான ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்ற உதவுகின்றன. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொற்று நோய்களின் ஆபத்து குறைகிறது.

ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்:


இஞ்சி தண்ணீர் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் காலையில் காபி டீக்கு பதில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

diabetes-

உடல் எடை குறைக்க உதவும்:


காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. இது உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை எரிக்க உதவுவதன் மூலம் உடல் எடை குறைப்பதை எளிதாக்குகிறது. அந்த வரிசையில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இந்த இஞ்சி தண்ணீர் ஒரு சிறந்த தேர்வு ஆகும்.

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]