தேன் ஆரோகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். சுத்தமான தேன் உணவிற்கு இனிப்பு சுவையை கொடுப்பதோடு மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்திலும் தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனை பின்வரும் 5 வழிகளில் எடுத்துக் கொண்டால் சிறந்த பலன்களை பெற முடியும். இது குறித்த தகவல்களை உணவியல் நிபுணர் மற்றும் பொது சுகாதார நிபுணரான ஸ்வாதி பத்வால் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது முதல் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பது வரை தேனில் பல நற்பண்புகள் காணப்படுகின்றன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம் தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: தாயான பிறகு ஒவ்வொரு பெண்ணும் சாப்பிட வேண்டிய 3 உணவுகள் !
தேனை பயன்படுத்துவதற்கான ஐந்து வழிகள்
- தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
- பாலுடன் தேன் கலந்து குடிப்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது. இதனால் மன நிம்மதியும் கிடைக்கும்.
- தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனை ஈறுகளில் தடவி வர வாய் வழி சுகாதாரத்தை மேம்படுத்தலாம். இதற்கு சுத்தமான தேனை விரல்களில் எடுத்து, ஈறுகளின் மீது மென்மையாக தேய்க்கலாம்.
- நினைவாற்றலை மேம்படுத்த மோரில் தேன் கலந்து குடிக்கலாம். விஷயங்களை நினைவில் கொள்ள கடினமாக இருந்தால் அல்லது நினைவாற்றல் பலவீனமாக இருந்தால் இது உங்களுக்கு உதவும்.

- உடல் சூட்டை தணிக்க தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக் கொள்ளலாம். கோடையில் உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து குடிக்கவும் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 2 வாரங்களில் 10 கிலோ எடையை குறைக்க நிபுணர் பரிந்துரை செய்யும் டயட் பிளான்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation