
ஆரோக்கியமான உடல் ஈடு இணை இல்லாத ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். இந்நிலையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டும். இதற்கு குடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் நோய் எதிர்ப்பு மண்டலம் முதல் நல்ல செரிமானம் வரை பல விஷயங்களும் குடலை சார்ந்தே இருக்கின்றன.
குடலில் நல்ல பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன. இவற்றில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது உடலின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும். இதனுடன் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களையும் வெளியேற்றலாம். குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பதன் மூலம் பல நோய்களிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் குடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது இல்லை. சுவையான உணவு மற்றும் பானங்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை ஆரோக்கியமான உணவுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதைத் தவிர்த்து உன் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். மத்திய அரசு மருத்துவமனையான ESIC மருத்துவமனையின் உளவியல் நிபுணரான ரித்து பூரி அவர்கள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சில எளிய குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: மலம் கழிக்க கடினமாக உள்ளதா? சிரமம் இல்லாமல் மலம் கழிக்க இதை ட்ரை பண்ணுங்க!
குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள தயிரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர் ஒரு சிறந்த புரோபயோடிக் உணவாகும். இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 100 கிராம் அளவிற்கு தயிர் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.

மோர் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த புரோபயோடிக் பானமானது உங்களுடைய குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தயிர் சாப்பிட பிடிக்காதவர்கள் அதனுடன் சீரகம், இஞ்சி, பெருங்காயம், கருவேப்பிலை போன்ற விஷயங்களை சேர்த்து மோராகவும் கடைந்து குடிக்கலாம். இதைத் தவிர மதிய உணவிலும் மோர் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது செரிமான சக்தியை மேம்படுத்தும். நீங்கள் விரும்பினால் வருத்த சீரகத்தையும் பயன்படுத்தலாம். நீங்கள் சமைக்கும் உணவில் சீரகம் சேர்க்க மறவாதீர்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 1/4 டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யவும்.
பெருங்காயம் செரிமான பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வாயு மற்றும் செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பெருங்காயம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இது வயிற்றில் உள்ள உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

தண்ணீர் குடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் தண்ணீரை குறைவாக எடுத்துக் கொள்ளும் பொழுது அது நிச்சயமாக குடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் தண்ணீர் பற்றாக்குறையினால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளரக்கூடிய சூழல் குறையலாம். ஆகையால் ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: வாய் புண் வருவதற்கான காரணம் என்ன? இதற்கான ஒரு எளிய தீர்வையும் தெரிந்துகொள்ளுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]