பால் நம்முடைய உடலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்க கூடிய ஒரு உணவு பொருளாகும். இதனில் சிறந்த அளவில் கால்சியம் உள்ளது. இது நம்முடைய எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் அருந்த அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு பருவத்திலும் பாலினை நாம் பருகலாம். எனினும், ஒவ்வொரு பருவத்திலும் எடுத்துக்கொள்ளும் பாலின் அளவு என்பது மாறுபடுகிறது. அதனை நாம் சரியாக செய்ய வேண்டியது அவசியம்.
ஒரு சிலர் கோடை காலம் அல்லது குளிர் காலத்தில் பால் அருந்துவதை தவிர்ப்பர். ஆனால், இவ்வாறு தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. பாலை சரியான அளவில் நாம் எடுத்துக்கொள்ளும்போது, அதன் பலன்களை நம்மால் ஒவ்வொரு பருவத்திலும் பெற முடியும். எனவே இந்த பதிவின் மூலமாக நாம் பருவத்தை பொறுத்து எவ்வளவு பால் அருந்துவது என்பதனை படித்தறிந்து பயன் பெறலாம்.
ஒரு டம்ளர் பாலுடன் உங்களின் நாளை தொடங்கலாம். இதனால் அந்த நாள் முழுவதும், உங்களால் ஆற்றல் நிரம்ப இருக்க முடியும். குளிர்காலங்களில், சூடாக பாலை குடிக்கலாம். கோடைக்காலத்தில் பாலை குளிர்வித்தோ அல்லது மில்க் ஷேக் போன்றவை செய்தோ எடுத்துக்கொள்ளலாம். எனினும், வெறும் வயிற்றில் பால் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. எனவே பால் அருந்துவதற்கு முன்பு கொஞ்சமாக ஏதேனும் உணவை சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு, பருப்பு வகைகளை சாப்பிட்ட பின் பாலினை அருந்தலாம்.
கால நிலை மிகவும் குளிர்தன்மை உடன் இருந்தால் அல்லது நாட்கள் கடும் குளிராக இருக்கும் எனில், சூடாக பாலை பருகுவது நன்மை அளிக்கும். மேலும், பாலுடன் நீங்கள் மஞ்சள் அல்லது இஞ்சியினை சேர்த்தும் குடிக்கலாம். இவை குளிர்ந்த காலநிலையில் நமக்கு உஷ்ணத்தை உணர உதவுகிறது. அதோடு, பருவக்காலத்தில் வரும் நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.
கோடைக்காலத்தில் பால் அருந்துவது கட்டாயமாகும். பால், இழந்த சோடியத்தை திரும்ப பெற உதவும். இதனால் வியர்வை வழியாக இழக்கப்படும் நம்முடைய ஆற்றல் மீண்டும் நமக்கு கிடைக்கும். நீங்கள் சரியான எடையுடன் இருக்க வேண்டுமெனில், ஒரு டம்ளர் குளிர்ந்த பாலினை கொழுப்பு இன்றி குடித்து வரலாம். இதனால் உங்களுடைய உடல் சுறுசுறுப்போடு இருக்கும். மேலும், நீர்ச்சத்தை அளித்து ஆரோக்கியத்துடன் நம்மை வைத்திருக்கும்.
பருவமழை காலங்களில் பாலை அருந்துவது சற்று சவாலான விஷயமே. இந்த காலங்களில், பச்சையாக பாலினை அருந்துவது நல்லதல்ல. பருவமழை காலங்களில் காய்ச்சாமல் பாலை பருகும்போது பாக்டீரியா மற்றும் கிருமிகள் நம் உடலுக்குள் சென்றுவிடும். பருவமழை காலங்களில் பாலின் தரமும் பாதிக்கப்படுகிறது. எனவே மழை காலங்களில், பாலினை நன்றாக கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. இந்த சமயத்தில், மஞ்சள் கலந்த பால், குங்குமப்பூ கலந்த பால், பாதாம் பால் அல்லது சூடான சாக்லேட் பால் போன்றவற்றை நாம் அருந்தலாம்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் ஒருவராக இருந்தால், உடற்பயிற்சி செய்து அரை மணி நேரம் கழித்தே பாலை அருந்த வேண்டும். இது, உடற்பயிற்சியினால் இழந்த உங்களின் உடல் ஆரோக்கியத்தை திரும்ப பெற உதவும். மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும். கோடைக்காலத்தில் உடற்பயிற்சி செய்து, நீர்ச்சத்தினை நீங்கள் இழந்தால், குளிர்ந்த பாலினை பருகுவது நல்ல யோசனையாகும். இவ்வாறு குளிர்ந்த பாலினை குடிக்கும்போது, நம்முடைய உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாடு நீங்கும்.
எனவே, காலநிலை பொறுத்து பாலை பருக மறவாதீர்கள். இவ்வாறு பாலை சரியாக பருகும்போது, இதனால் கிடைக்கும் பலன்கள் பலவாகும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: shutterstock
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]